உள்ளடக்கத்துக்குச் செல்

கள்ளநாணயத் தடுப்பு ஒப்பந்தச் சட்டமூலம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தோல்வி

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூலை 7, 2012

ஐரோப்ப நாடாளுமன்றத்தின் முழுமையான அமர்வில் முன்மொழிந்த ஏசிடிஏ (ACTA) என்னும் கள்ளநாணயத் தடுப்பு வர்த்தக ஒப்பந்தம் 478 எதிர்ப்பு வாக்குகளுடன், 39 ஆதரவு வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்துள்ளது. 165 உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.


பிரசல்சில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற அமர்வு

ஏசிடிஏ மறுக்கப்பட்டதை அடுத்து, ஐரோப்பா முழுவதும் உள்ள போராட்டக்காரர்கள் அனைவரும் தங்களின் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். பெரும்பாலும் தொழிற்சாலைகளில் வேலைப் பார்த்து கொண்டு காப்புரிமைகளையும், வர்த்தகக் குறியீடுகளையும் சார்ந்திருக்கும் ஏசிடிஏவின் ஆதரவாளர்கள் அவர்களின் வாழ்க்கைக்காகவே இதனை முன்மொழிந்தனர். ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு மிகவும் குறைந்துவிட்டது.


இந்தப் பன்னாட்டு வர்த்தக ஒப்பந்தத்தில் ஆசுத்திரேலியா, கனடா, சப்பான், மொரோக்கோ, நியூசிலாந்து, சிங்கப்பூர், தென் கொரியா, மற்றும் அமெரிக்கா ஆகியன சென்ற ஆண்டு அக்டோபரில் கையெழுத்திட்டிருந்தன. அறிவுசார் சொத்துரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு பன்னாட்டு செந்தரம் ஒன்றை உருவாக்குவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. சட்டவிரோதக் கடத்தல் பொருட்கள், வர்க்க மருந்துகள், இணையத்தில் பதிப்புரிமை மீறல் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் பன்னாட்டுச் சட்டவடிவமைப்பை உருவாக்குவதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.


சர்ச்சைக்குரிய இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐரோப்பா முழுவதும் போராட்டங்களும் எதிர்ப்பு ஊர்வலங்களும் நடைபெற்றன. இத்தீர்மானத்திற்கு எதிராக 2 மில்லியன் கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டன.


மூலம்[தொகு]