காகிதத்தில் ஒரு நுண்ணோக்கி '''போல்டுஸ்கோப்'''

விக்கிசெய்தி இலிருந்து

ஏப்ரல் 07.04.2014

போல்டுஸ்கோப் என்ற காகித நுண்ணோக்கியை எளிய பொருட்கள் கொண்டு அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் விஞ்ஞனி கண்டுபிடித்துள்ளார்.

இந்திய வம்சாளியைச் சேர்ந்த மனு பிரகாஷ் (Manu Prakash) என்ற விஞ்ஞானி அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துவருகிறார். இவர் சாதாரண காகிதத்தின் உதவியோடு போல்டுஸ்கோப் என்ற இந்த நுண்ணோக்கியை தயாரித்துளார். இதன் செயல்பாடுகளை மூன்று நிலைகளாக பிரித்துள்ளார். எந்த பொருளை பரிசோதனை செய்ய விரும்புகிறோமோ அதன் மாதிரியின் 'ஸ்லைடை' பொருத்த வேண்டும். பின்னர் கோளவடிவிலான 'லென்சை' வைக்க வேண்டும், பின்னர் 'லெட்' விளக்கின் ஒளியை ஒளியூட்டவேண்டும். இப்போது நாம் வைத்துள்ள பொருளைப் பெரிதாக்க நாம் வைத்துள்ள பொருளை நமது கட்டைவிரலால் நகர்த்த வேண்டும்.


[1] [2]

மேலும் தெரிந்துகொள்ள[தொகு]