உள்ளடக்கத்துக்குச் செல்

காசுமீரின் அந்துவாராவில் 5 பாதுகாப்புப்படையினர் கொல்லப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மே 3, 2020

காசுமீர் மாநிலத்தின் அந்துவாரா பகுதியில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில் கர்னல் ஒருவர், மேஜர் ஒருவர் உட்பட 5 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். இரண்டு தீவிரவாதிகள் சங்கிமுல் என்னும் சிற்றூரில் உள்ள குடிமக்களை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்திருப்பதாகக் கிடைத்த செய்தியின் அடிப்படையில் நடத்தப்பட்ட சண்டையில் குடிமக்கள் அனைவரும் மீட்கப்பட்டனர். அந்த இரண்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையில் நால்வரும் காவல் துணை ஆய்வாளர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.

இந்தச் சண்டை 18 மணி நேரம் நீடித்தது. தீவிரவாதிகள் கொல்லப்பட்ட இடத்தில் இரண்டு ஆயுதங்களும் போர்க்கருவிகளை சேர்ந்து வைக்கும் இடமும் கண்டறியப்பட்டது.

மூலம்[தொகு]