கிளிநொச்சியில் இடம்பெற்ற படுகொலை குறித்து விசாரணை வேண்டும் என கனடா வலியுறுத்தியது
- 9 ஏப்பிரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது
- 9 ஏப்பிரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
- 9 ஏப்பிரல் 2015: சிறை விதிக்கப்பட்ட திசைநாயகத்துக்கு 2 பன்னாட்டு விருதுகள்
- 6 ஆகத்து 2014: இலங்கை அரசு நியமித்த நிபுணர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்த்தப்படுகிறது
- 2 ஆகத்து 2014: 157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்
சனி, மே 12, 2012
இலங்கையின் வடக்கே கடந்த வாரம் இடம்பெற்ற தமிழ் கனேடியர் ஒருவரின் படுகொலை குறித்து முழுமையான விசாரணை தேவை என கனடா அதிகாரபூர்வமாக இலங்கை அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அந்தோனிப்பிள்ளை மகேந்திரராஜா என்பவர் ஈழப்போரின் போது இழந்த தனது சொத்துக்களை மீளப் பெற இலங்கை சென்றிருந்தபோது இனந்தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகளின் தலைமையிடமாக அமைந்திருந்த கிளிநொச்சி நகர் அவரது இருப்பிடமாகும்.
கிளிநொச்சியில் அவரது இருப்பிடத்துக்கருகில் சில குழுக்களினால் படுகொலை செய்யப்பட்டதாக இலங்கைக்கான கனடா தூதுவர் புரூஸ் லெவி தெரிவித்தார். முகமூடி அணிந்த சிலரினால் மகேந்திரராஜா தாக்கப்படுவதை உள்ளூர்வாசிகள் சிலர் அவதானித்துள்ளதாக ஈழ ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் இக்குழுவினரிடமிருந்த தப்பிப்பதற்காக மிகவும் போராடியதாகத் தெரிவிக்கின்றன. அத்துடன் அவரது அந்தரங்க உறுப்புகள் சிதைக்கப்பட்டும் உள்ளன.
கிளிநொச்சியில் கடைகளின் உரிமையாளராக இருந்த மகேந்திரராஜா போர்க் காலத்தில் கனடாவில் குடியேறினார். அவரது சொத்துக்கள் பல்பொருள் அங்காடி நிறுவனம் மற்றும் ஏனைய வியாபார நிறுவனங்கள் வசம் உள்ளதாகவும் புரூஸ் லெவி தெரிவித்துள்ளார். தனது சொத்துக்கள் குறித்து இராணுவத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இராணுவ புலனாய்வுத் தரப்பினரால் அவரது நடமாட்டங்கள் அவதானிக்கப்பட்டதாகவும் சில வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மூலம்
[தொகு]- Canada urges Sri Lanka police to probe murder, பிபிசி, மே 11, 2012
- Montreal man killed in northern Sri Lanka, சிபிசி, மே 11, 2012