உள்ளடக்கத்துக்குச் செல்

சமிந்த வாஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூலை 19, 2009 கொழும்பு:

இலங்கை துடுப்பாட்ட அணியின் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவிருக்கும் இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியை அடுத்து தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.


கொழும்பில் எஸ்.எஸ்.சி விளையாட்டரங்கில் செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவிக்கையில்ல் தனது குடும்பத்துடன் கலந்தாலோசித்து விட்டே இம்முடிவிற்கு வந்ததாகத் தெரிவித்தார்.


எனினும் ஒருநாள், மற்றும் இருபது20 போட்டிகளில் தாம் தொடர்ந்து விளையாடவிருப்பதாக வாஸ் தெரிவித்தார்.


பாகிஸ்தானுடனான தற்போதைய தொடரில் முதலிரண்டு போட்டிகளில் விளையாட வாஸ் தெரிவு செய்யப்படவில்லை என்பது குறிப்ப்பிடத்தக்கது.

மூலம்[தொகு]