சமோவாவில் ஆழிப்பேரலை - நூற்றுக்கும் அதிகமானோர் இறப்பு

விக்கிசெய்தி இலிருந்து
சமோவா தீவுகள்

புதன், செப்டம்பர் 30, 2009, சமோவா:


ஆசியா-பசிபிக் தீவான சமாவோ, அமெரிக்க சமோவா, மற்றும் தொங்கா தீவுகளில் ஆழிப்பேரலை (சுனாமி) அனர்த்தம் ஏற்பட்டதில் 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் முற்றிலும் அழிந்தன. மேலும், நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.


பசிபிக் பெருங்கடலில் நியூசிலாந்துக்கு கிழக்கே இருக்கும் இந்த சிறிய தீவின் தென் கிழக்கே 120 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில், இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவில் 8.3 அளவு பெரும் நிலநடுக்கம் பதிவானது. இதனை அடுத்து 4.5 மீட்டர் உயர மாபெரும் சுனாமி அலைகள் ஏற்பட்டன. இதில் கடலோரத்தில் உள்ள பகுதிகளில் மாபெரும் அலைகள் புகுந்து வீடுகளைத் தரைமட்டமாக்கின. இதில் 80 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பல உடல்கள் மண்ணுக்குள் பாதி புதைந்த நிலையில் காணப்படுகின்றன. மேலும் பல உடல்கள் புதைந்து போயிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


சமோவாவில் இரண்டு ஆஸ்திரேலியர்கள் இறந்துள்ளதாக ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் அறிவித்தார்.


தொங்காவில் 5 பேர் இறப்பு


சமோவாவுக்கு அருகில் இருக்கும் தொங்கா தீவிலும் சுனாமி தாக்கி 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இந்த சுனாமி அலைகள் நியூசிலாந்து வரை வந்தன. அங்கு குறைந்த உயர சுனாமி அலையே வந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.


அமெரிக்க சமோவா தீவில் 25 பேர் இறப்பு


சமோவாவின் அமெரிக்க ஆளுகைக்குள்ள அமெரிக்க சமோவா பகுதியில் 25 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அப்பகுதியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அமெரிக்க விமான படைக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சி-130 ரக விமானங்கள் நிவாரணப் பொருட்களுடன் சமாவோ சென்றடைந்துள்ளன.


மூலம்[தொகு]