சஹாரன்பூரில் இந்திய முஜாஹிதீன் தீவிரவாதி கைது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

சனி, செப்டம்பர் 6, 2014

உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் இந்திய முஜாஹிதீனை சேர்ந்த தீவிரவாதி கைது செய்யப்பட்டார். பூனேவில் தகவல் அழைப்பு மையத்தில் வேலை செய்து வந்த அஜாஸ் ஷேக் என்பவரை டெல்லி காவல்த்துறையின் சிறப்பு பிரிவு மற்றும் பாதுகாப்பு துறை கைது செய்தது.

கைது செய்யப்பட அஜாஸ் ஷேக் என்பவர் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜமா மசூதி குண்டுவெடிப்பு உட்பட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர். இவரது கைதையும் சேர்த்தால் இந்தியன் முஜாஹிதீனின் முக்கிய புள்ளிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிடிப்பட்ட தீவிரவாதி தகவல் தொழில்நுட்பத்தில் தேர்ந்தவர் என்றும், தீவிரவாதிகளுக்கு போலி அடையாள அட்டைகள் மற்றும் போலி ஆவணங்களை தயாரித்தும் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

உத்தர பிரதேசத்தில் கைது நடந்ததை தொடர்ந்து, அங்கே ஏதேனும் அசம்பாவிதம் நடக்க திட்டமிடப்பட்டிருந்ததா என காவல்த்துறையினர் சந்தேகக்கின்றனர்.

மூல செய்தி[தொகு]