உள்ளடக்கத்துக்குச் செல்

சிறிய ரக அணுமின் உலைகளை ஜப்பானிய நிறுவனம் அமைத்து சாதனை

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், அக்டோபர் 29, 2009


ஜப்பானின் தோஷியா நிறுவனம் புதிதாக சிறிய ரக அணு உலைகளைத் தயாரித்து சாதனை படைத்துள்ளது. இவை வளரும் நாடுகளுக்கும், வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் மிகவும் ஏற்றவை என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


10 ஆயிரம் கிலோவாட் மின்சாரத்தைத் தயாரிக்கும் திறன்கொண்ட இந்த அணு உலைகளை தோஷியா வடிவமைத்துள்ளது. இந்த அணு உலைகளுக்கு அமெரிக்காவின் ஒப்புதலைப் பெறுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


"4 எஸ்" என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அணு உலைகளுக்கு கண்காணிப்பு, நிர்வகித்தல் ஆகியவை மிகக் குறைவாகத் தேவைப்படும். இவை தாமாகவே செயற்பாட்டை நிறுத்திக்கொள்ளும் திறன் படைத்தவை. மற்ற அணு உலை களைவிட இவற்றில் பாதுகாப்பு அதிகம் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அணு உலைகளை அமெரிக்காவுக்கு விற்பனை செய்ய தோஷியா நிறு வனம் திட்டமிட்டுள்ளது. இதன் பின்னர் வரவேற்பைப் பொறுத்து இவற்றைத் தயாரித்து வளரும் நாடுகளுக்கு அளிக்க தோஷியா முடிவு செய்துள்ளது.


இவை தவிர, மிட்சுபிஷி நிறுவனம் அதிக அழுத்தமுடைய நீர் உலைகளை வடிவமைத்துள்ளது. இதன் மூலம் 3.5 இலட்சம் கிலோவாட் மின்சாரம் தயாரிக்க முடியும் என மிட்சுபிஷி தெரிவித்துள்ளது.


மற்றொரு ஜப்பானிய நிறுவனமான இட்டாச்சி, நீர் கொதிகலன் உலையை வடிவமைத்துள்ளது. இதில் 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என ஹிடாச்சி தெரிவித்துள்ளது. தற்போதைய அணு மின் உலைகளுக்கு உலகம் முழுவதும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. தற்போது 27 நாடுகளில் 151 அணுமின் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

மூலம்