உள்ளடக்கத்துக்குச் செல்

சீனாவில் பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி முறியடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து
சீனாவில் சின்ச்சியாங் மாகாணம்

புதன், செப்டம்பர் 16, 2009, சீனா:


சீனாவின் மேற்கு மாகாணமான சின்ச்சியாங்கில் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்த ஒரு பயங்கரவாத சதித் திட்டத்தை போலீசார் முறியடித்து விட்டதாகவும், இது தொடர்பில் ஆறுபேர் கைது செய்யப்பட்டதாகவும், குண்டுதயாரிக்கப்பயன்படுத்தப்படும் பொருட்களையும் கைப்பற்றியதாகவும் சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது.


இந்நடவடிக்கை பயங்கரவாத தாக்குதல் மேலும் ஏற்படாமல் காலதாமதமின்றி தடுத்துள்ளது என்று சீனா அறிவித்துள்ளது. இருபதுக்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சின்குவா கூறியுள்ளது.


செயிட்டாமுட் ஓபுல், டாசின் மெகுமுத் ஆகியோரை முக்கியமாகக் கொண்ட 6 குற்றவாளிகள் சின்ச்சியாங் காவற்துறையால் கைது செய்யப்பட்டனர். சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் உருமுச்சியில் கடந்த ஜூலையில் இருந்து வீகர் பூர்வகுடியனருக்கும், ஹென் சைனீஸ் இனத்தவருக்கும் இடையே நடந்த மோதல்களில் இருநூறுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட வன்முறைக் குற்றச் சம்பவம் ஏற்பட்ட பிறகு, அக்சூ நகரில் 20 குண்டுவெடிப்புச் சாதனங்களை இக்குற்றக்குழு உருவாக்கி, பயங்கரச் சீர்குலைவு நடவடிக்கைகளை திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது.


ஆனால் உலக வீகர் காங்கிரஸ் இது தொடர்பில் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது.

மூலம்

[தொகு]