சுற்றுலா மேம்பாடு - தொல்லியல் துறை ஆய்வு
சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரம் தென்னிந்தியாவின் ஒரு முக்கியமான சுற்றுலா தளம். இங்கு பல்லவர் கால சிற்பங்கள் நிறைந்து காணப்படும். இவற்றை காண்பதற்கு சுற்றுலா பயணிகள் பல் நாடுகளில் இருந்தும் வருவது வழக்கம்.
இந்த நகரின் சிறப்பை கருதி சமீபத்தில் மத்திய அரசு சர்வதேச சுற்றுலா தரத்திற்கு ஈடு செய்யும் வகையில், இந்த நகரத்திற்கு "ஐகோனிக் நகரம்" என்ற சிறப்பு அந்தஸ்தை கொடுக்கும் முடிவை எடுத்தது.
இதற்கிடையில், ரெனால்ட் நிசான் என்ற தனியார் கார் தயாரிப்பு நிறுவனம் சமூக பொறுப்பு திட்டத்தின் மூலமாக இருபது பாட்டரி வாகனங்களை முதியோர்கள் மற்றும் சிறுவர்கள் பயன்படுத்துவதற்கு உதவும் வகையில் வழங்க உள்ளது.
இது மட்டும் அல்லாமல், சிற்ப வளாக மின் விளக்குகளின் மின்சார தேவைக்காக சோலார் அமைப்பு, குடிநீர் வசதி போன்றவற்றையும் தர முடிவு செய்தது.
இந்த திட்ட அறிக்கையை பெற்ற தொல்லியல் துறை, இதற்கான ஆய்வுகளை மேற்கொண்டது. இது சம்பந்தமாக தொல்லியல் துறை நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது.
(ஆதாரம் - தினமலர்: 08.06.2021)