சென்னையில் ஒரு சிறுவன் உட்பட இந்தியாவில் பன்றிக் காய்ச்சலில் நால்வர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஆகத்து 11, 2009, சென்னை, தமிழ்நாடு:


பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சென்னையைச் சேர்ந்த சிறுவன் சஞ்சய் திங்கட்கிழமை காலை உயிரிழந்தான். பரோடா, பூணே, மற்றும் மும்பாயில் மேலும் மூவர் இன்று செவ்வாய்க்கிழமை இறந்தனர். இதன் மூலம் இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்திருப்பதாக இந்திய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.


தென் இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் ஏற்பட்டுள்ள முதல் இறப்பு இது. குழந்தைகளுக்கு இந்த நோய் தொற்றக் கூடும் எனும் அச்சத்தில் நாடெங்கிலும் உள்ள பல பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.


இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் ஏற்பட்ட முதல் இறப்பு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. தற்போது இந்தியாவில் எண்ணூற்றுக்கும் அதிகமானோர் எச்1என்1 கிருமியினால் பீடிக்கப்பட்டுள்ளார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.


தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு சிகிச்சையளிக்க போதுமான மருந்துகளும், சோதனை செய்ய போதுமான வசதிகளும் கையிருப்பில் உள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத் துறையின் செயலர் வி கே சுப்புராஜ் பிபிசியிடம் தெரிவித்தார்.

தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]