உள்ளடக்கத்துக்குச் செல்

சென்னையில் வணங்காமண் கப்பலில் இருந்து பொருட்கள் இறக்கம்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூலை 3, 2009 சென்னை, தமிழ்நாடு:

இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களுக்காக வெளிநாடுகளில் வாழும் தமிழர்களால் "கப்டன் அலி" என்ற வணங்காமண் கப்பலில் அனுப்பப்பட்ட உதவிப் பொருட்கள், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இறக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கப்பலில் உள்ள பொருட்கள் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டு "கொலராடோ" என்ற சரக்குக் கப்பலில் ஜூலை 6 ம் நாள் இலங்கைக்கு அனுப்பப்படும்.

கப்பலில் வந்த பொருட்களை இலங்கையில் கையேற்கவிருந்த தமிழ் வர்த்தகரை தடுத்துவைத்திருப்பதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மூலம்[தொகு]