சேலத்தில் மாற்றுக்கல்விக்கான 9ஆவது வாசிப்பு முகாம்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, திசம்பர் 27, 2013

சேலத்தில் மாற்றுக்கல்விக்கான 9ஆவது வாசிப்பு முகாம் 28, 29 ஆகிய இருநாட்களில் நடைபெற உள்ளது. இம்முகாம் சேலம் இரும்பாலையின் முதல் வாயிலுக்கு அருகிலுள்ள சமுதாயக்கூடத்தில் நிகழ உள்ளது.

தமிழக அறிவியல் இயக்கம் சார்பில் ஆசிரியர், கல்வி ஆர்வளர்களை மையப்படுத்தி நான்கு மாதத்திற்கு ஒருமுறை மாநில அளவில் மாற்றுக்கல்விக்கான முகாம்களை நடத்தி வருகின்றது. ஒவ்வொரு முறையும் கல்வி சார்ந்த நூல்களைத்தேர்வு செய்து கூட்டாகப் படித்து கலந்தாய்வு செய்து,சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு அக்கலந்தாய்வுகளைத் தொகுப்பது என்னும் திட்டத்தின் அடிப்படையில் இம்முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

இம்முறை முகாமிற்கு ஆயிசா இரா. நடராசன் எழுதிய இது யாருடைய வகுப்பறை? என்ற நூல் படித்து கலந்தாய்விற்கும் தொகுப்பாய்விற்கும் உட்படுத்தப்பெற உள்ளது. இந்நிகழ்வில் பேராசிரியர் மணி வரவேற்புரை ஆற்றவும்,புதிய தலைமுறை கல்வி இதழின் ஆசிரியர் பொன். தனசேகரன் தொகுப்புரையாற்ற உள்ளார். பேராசிரியர் ச. மாடசாமி, பேராசிரியர் கே. இராஜூ, பேராசிரியர். பெ. விஜய குமார், கல்வி ஆய்வாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, ஜெ. கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் பங்கேற்று நிகழ்விற்கு உறுதுணையாற்ற உள்ளனர்.

இம்முகாமிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 82க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.

முகாம் தொடர்பிற்கு 7598225040, 9443391777, 9486486755 ஆகிய உலா பேசி எண்களைத்தொடர்பு கொள்ளலாம்.