ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிசப் போராளிகளின் புதைகுழி கண்டுபிடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூன் 13, 2011

இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஜார்க்கண்டில் மாவோயிசத் தீவிரவாதிகள் 14 பேரினது உடல்கள் அடங்கிய புதைகுழி ஒன்றைத் தாம் கண்டுபிடித்துள்ளதாக மாநிலக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


ரன்ச்சி மற்றும் குண்டி மாவட்டங்களின் எல்லைப் புறத்தில் உள்ள காடொன்றில் இப்புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மாவோயிசத் தீவிரவாதிகளின் முக்கிய இடமாகக் கருதப்படுகிறது.


பாதுகாப்புப் படையினருடனான மோதல்களில் இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், தமது போராளிகளின் உடல்களை இராணுவத்தினர் தம்முடன் கொண்டு செல்வதை தீவிரவாதிகள் விரும்புவதில்லை எனவும், அவர்களே இவற்றைப் புதைத்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர். உள்ளூர் வாசிகள் தெரிவித்த முறைப்பாடு ஒன்றை அடுத்தே காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். கண்டெடுக்க ப்பட்ட உடல்களில் துப்பாக்கிச் சூடுகள் காணப்பட்டதாகவும் சிலர் சீருடை அணிந்திருந்ததாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.


பழங்குடியினரதும் , மற்றும் ஏழைகளினதும் உரிமைகளுக்காகத் தாம் போராடுவதாக தீவிரவாதிகள் தெரிவிக்கின்றனர். நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் மாவோயிசத் தீவிரவாதிகள் பெருமளவு உள்ளனர்


மூலம்[தொகு]