ஜாவா தீவை 6.1 அளவு நிலநடுக்கம் தாக்கியது
- 3 மார்ச்சு 2016: இந்தோனேசியா கடல் பகுதியில் நில நடுக்கம்
- 14 திசம்பர் 2015: இந்தோனேசியாவில் கடலுக்கடியில் 7.1 அளவு நிலநடுக்கம்
- 29 ஏப்பிரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது
- 9 ஏப்பிரல் 2015: கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்ற விசாரணை
- 28 திசம்பர் 2014: இந்தோனேசியாவின் ஏர்ஏசியா வானூர்தி இக்யு.இசட் 8501 162 பேருடன் மறைந்தது
திங்கள், சனவரி 27, 2014
கடந்த சனிக்கிழமை அன்று இந்தோனேசியாவின் ஜாவா தீவை கடுமையான ஆழ்கடல் நிலநடுக்கம் தாக்கியதில் குடிமனைகள் சிலவற்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், இறப்புகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
மத்திய ஜாவாவின் தெற்குக் கரையில் குரோயா நகரின் தெற்கே 41 கிமீ தூரத்தில், 83 கிமீ ஆழத்தில் 6.1 அளவு நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பனியூமாசு நகரில் பள்ளிவாசல் ஒன்றின் கூரை இடிந்து வீழ்ந்துள்ளது. பல வீடுகள் இடிந்துள்ளன. மத்திய மற்றும் மேற்கு ஜாவா மாகாணங்களில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால் மக்கள் அச்சமடைந்து காணப்பட்டனர். சுமார் 20 செக்கன்கள் இந்நிலநடுக்கம்
6.5 அளவு நிலநடுக்கம் பதிவானதாக இந்தோனேசியா அறிவித்திருந்தது, ஆனாலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
இந்தோனேசியா பசிபிக் எரிமலை வளையத்தில் காணப்படுவதால் இங்கு நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. 2004 டிசம்பரில் ஆச்சே மாகாணத்தில் இடம்பெற்ற நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலையில் 230,000 பேர் உயிரிழந்தனர்.
மூலம்
[தொகு]- Strong earthquake rocks Indonesia's Java Island, டைம், சனவரி 25, 2014
- 6.1-magnitude quake rocks Indonesia's Java island, தி இந்து, சனவரி 25, 2014
- Strong earthquake rocks Indonesia's Java island, யூஎஸ்ஏ டுடே, சனவரி 25, 2014