உள்ளடக்கத்துக்குச் செல்

தமது தலைவர் மெசூது இறந்து விட்டதை பாகிஸ்தான் தலிபான்கள் ஒப்புக்கொண்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஆகத்து 26, 2009, பாகிஸ்தான்:


பல வாரங்களாக மறுத்து வந்தபின் பாகிஸ்தானின் தலிபான் போராளிகள் தற்பொழுது தங்கள் தலைவர் பைத்துல்லா மெசூது இறந்து விட்டதை ஒப்புக் கொண்டுள்ளனர்.


ஏபி செய்தி நிறுவனத்துக்கு ஹக்கிமுல்லா மெசூது, வாலியுர் ரஹ்மான் ஆகிய இரு போராளித் தலைவர்கள் வழங்கிய தொலைபேசி பேட்டியில் இதைத் தெரிவித்தனர்.


மேலும், தலிபான் போராளிகளின் தற்போதைய தலைவர் ஹக்கிமுல்லா மெசூது என இருவரும் கூறியதாக ஏபி செய்தித் தகவல் தெரிவிக்கிறது.


பைத்துல்லா மெசூது அமெரிக்க உளவுப் படையினரின் தாக்குதலில் இம் மாதம் 5ம் தேதி மரணமடைந்ததாக பாகிஸ்தான் அரசு ஏற்கனவே கூறியிருந்தது. இதை இதுநாள் வரை தலிபான் போராளிகள் மறுத்து வந்தனர். அது மட்டுமல்லாது, பைத்துல்லாவுக்குப் பின் தலைமைப் பொறுப்பேற்பதில் நடந்த போராட்டத் தில் இரு முக்கிய பேராளித் தவைர்களான ஹக்கிமுல்லா மெசூதும் வாலியுர் ரஹ்மானும் இறந்து விட்டதாக இதற்கு முன் கூறப்பட்டது.


மூலம்[தொகு]