நாகா பிரிவினைவாதிகள் மீது பர்மிய படையினர் தாக்குதலை ஆரம்பித்தனர்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, நவம்பர் 7, 2009


பர்மாவின் வடகிழக்குப் பகுதியில் சகாய்ங் பிராந்தியத்தில் உள்ள நாகா பிரிவினைவாதிகளின் மையங்கள் மீது பர்மிய துருப்புக்கள் அதிரடித் தாக்குதலைத் துவக்கியிருப்பதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அந்தத் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியாவுக்குள் ஊடுருவ முயலும் பிரிவினைவாதிகளைப் பிடிக்க, பர்மாவில் நாகா பிரிவினைவாதிகளின் மையத்து்ககு எதிர்பகுதியில் உள்ள மலைப்பகுதிக்கு இந்தியப் படைகள் அனுப்பப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.


இந்தியாவின் வடகிழக்கில் உள்ள நாகாலாந்து மாநிலத்தில் உள்ள மனியக்சா கிராமத்துக்கு எதிரே, NSCN எனப்படும் தேசிய நாகலாந்து சோசலிச கவுன்சிலின் கப்லாங் பிரிவின் இரண்டாவது பட்டாலியனுக்கான தலைமையகம் அமைந்துள்ளது.


அந்த முகாம்கள் மீதான தாக்குதல் நடவடிக்கையில், பர்மியத் துருப்புக்கள் ஈடுபட்டுள்ளன. ஆனால், அதுபற்றி பர்மிய ராணுவ அதிகாரிகளோ ராஜாங்க அதிகாரிகளோ எந்தத் தகவல்களையும் தர விரும்பவில்லை. ஆனால் நாகா முகாம்கள் மீது பர்மியத் துருப்புக்கள் தாக்குதல் நடத்துவதைக் காணமுடிந்ததாக மனியக்சா கிராமவாசிகள் தெரிவிக்கிறார்கள்.

மூலம்