நீலகிரி உயிரிக்காப்பக காடுகளில் மூன்று புதிய வகை செடிகள் கண்டுபிடிப்பு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

திங்கள், நவம்பர் 9, 2009


கேரளாவின் வயநாடு, நீலகிரி உயிரிக்காப்பக காடுகளில் மூன்று புதிய வகை தாவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எம்.எசு. சுவாமிநாதன் ஆய்வு நிறுவனம் (MSSRF) புதுர்வயல் என்ற பகுதியில் மேற்கொண்ட ஆய்வுகளில் இது கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் Miliusa wayanadica, Miliusa gokhalae ஆகியன கஸ்டார்ட் ஆப்பிள் (custard apple) வகையைச் சேர்ந்தவை. Oberonia swaminathanii என்பது ஆர்க்கிடு வகையைச் சேர்ந்ததாகும். மேலும் Eugenia argentea, Hedyotis wyanadensis ஆகிய செடி வகைகள் 130 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அழிந்து-போன இனவகைகள் என்று நம்பப்பட்டு வந்தவை.


இவ் ஆய்வில் மொத்தம் 2,034 பூ வகைகள் கண்டறியப்பட்டுள்ளன என்று ஆய்வை மேற்கொண்ட உயிரியலாளர் ரத்தீசு நாராயணன் தெரிவித்தார். கேரளாவில் வயநாடு மாவட்டத்திலேயே மிக அதிகமான பூ வகைகள காணப்படுகின்றன.


ஒபெரோனொயா சுவாமிநாதனீ (Oberonia swaminathanii) என்பது புதிய வகை ஆர்க்கிடு ஆகும். இது கால்ப்பெட்டா மலைத்தொடரில் குறிச்சியாறு மலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

மூலம்[தொகு]