நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உசைன் போல்ட் புதிய உலக சாதனை

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search
Usain Bolt Olympics cropped.jpg

ஞாயிறு, ஆகத்து 16, 2009, பெர்லின்:


மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளவரும் நூறு மீட்டர் ஓட்டப் பந்தய உலக சாதனையாளருமான யமேக்காவின் உசைன் போல்ட் 9.58 வினாடிகளில் நூறு மீட்டர் தூரத்தைக் கடந்து தனது சாதனையை தானே முறியடித்துள்ளார்.


பெர்லினில் நடந்துவரும் உலக தடகளப் போட்டிகளில் நேற்று ஞாயிறன்று நடந்த ஆண்களுக்கான நூறு மீட்டர் ஓட்டம் இறுதிப் போட்டியில் 22 வயதான உசைன் போல்ட் மகத்தான வெற்றி பெற்றார்.


பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் தான் ஏற்படுத்தியிருந்த சாதனை நேரத்தை விட 0.11 விநாடிகள் குறைவான நேரத்தில் அவர் தூரத்தைக் கடந்தார்.


அமெரிக்காவின் டைசன் கே 9.71 விநாடிகளுடன் இரண்டாவது இடத்திலும் ஜமைக்காவின் அசாஃபா பவல் 9.84 விநாடிகளுடன் மூன்றாவது இடத்திலும் வந்தனர்.

மூலம்[தொகு]