உள்ளடக்கத்துக்குச் செல்

நேபாளத்தில் இந்தியப் பிராமணர்கள் மார்க்சியப் போராளிகளால் தாக்கப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, செப்டம்பர் 5, 2009, நேபாளம்:


நேபாளக் கோவிலில் மக்களை சாதியால் பிரிக்கும் பிராமணர்களின் பூநூலை மாவோயிசக் கம்யூனிஸ்ட் போராளிகள் அறுத்தெறிந்தனர்.


நேபாள நாட்டில் காத்மாண்டுவில் பசுபதிநாத் என்ற புகழ் பெற்ற இந்துக் கோயிலில் சமீபத்தில் இந்தியாவின் கர்நாடகாவை சேர்ந்த கிரிஷ் பட்டா (32), ராகவேந்திர பட்டா (32) என்பவர்கள் உட்பட பலர் பூஜாரிகளாக நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்துக்கு மாவோ தீவிரவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


நேற்றுக் காலை 40க்கும் மேற்பட்ட மாவோயிசப் போராளிகள், பக்தர்கள் வேடத்தில் கோயிலுக்குள் நுழைந்தனர். அங்கு பூஜை செய்யும் பணியில் ஈடுபட்டி ருந்த கிரிஷ், ராகவேந்திராவை அவர்கள் திடீரென சுற்றி வளைத்து கடுமையாக தாக்கினர். அவர்களின் வேட்டிகளை கிழித்து, பூ நூலை அறுத்து வீசினர். தகவல் அறிந்து போலீசார் வருவதற்குள் நக்சலைட்டுகள் ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த கிரஷ்சும் ராகவேந்திராவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம், இந்த சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பில் நேபாள அரசைத் தொடர்புகொண்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளளார். குருக்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு நேபாள கலாச்சார அமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.


பசுபதி நாதர் கோயிலில் நேபாளர்களே குருக்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று விரும்பும் இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மாவோயியவாதிகளின் ஆதரவு பெற்றவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.


மூலம்[தொகு]