நேபாள அரசு பதவி விலகுவதற்கு மாவோயிஸ்ட்டுகள் 3 நாள் காலக்கெடு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஆகத்து 5, 2009, காத்மண்டு, நேபாளம்:


நேபாளத்தில் பிரதமர் மாதவ் குமார் நேபாள தலைமையிலான 23 கட்சிகளின் கூட்டணி அரசு பதவி விலகுவதற்கு மாவோயிஸ்ட்டுகள் 72 மணிநேர காலக்கெடு விதித்துள்ளனர்.


ஆட்சியை கலைத்துவிட்டுப் புதிய அரசை அமைத்துவிட்டால் பாராளுமன்றத்தைக் கைப்பற்றுவோம் என்றும் மாவோயிஸ்ட்டுகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்தக் கெடு நேற்று முன்தினம் விதிக்கப்பட்டதால் இதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.


இந்நிலையில், மாவோயிஸ்ட்டுகளின் இந்தக் கெடுவைத் தொடர்ந்து பிரதமர் மாதவ் குமார் ஜனாதிபதி ராம் பரனை சந்தித்து அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.


இதனிடையே, அரசு கலைக்கப்படாவிட்டால் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க முடிவெடுப்பதற்காக முன்னாள் நிதியமைச்சர் பாபுராம் பட்டாராய் தலைமையில் மூவர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரே கருத்துடைய சக்திகளை ஒன்று திரட்டி எதிர்கால போராட்டத்தை இக்குழு வழிநடத்திச் செல்லும் என்றும் மாவோயிஸ்ட் பேச்சாளர் தினாத் ஷர்மா தெரிவித்துள்ளார்.


மூலம்[தொகு]