உள்ளடக்கத்துக்குச் செல்

நைஜீரிய கிளர்ச்சிக்குழு தலைவர் விடுதலை

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூலை 13, 2024 நைஜீரியா:

நைஜீரியாவில் பிரதான ஆயுதக் குழுத்தலைவர் ஹென்றி ஒக்காவுக்கு எதிரான தேசத்துரோக வழக்கினை அந்நாட்டு அரசாங்கம் திரும்பப் பெற்றுக் கொண்டதையடுத்து அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

எண்ணெய் வள வருவாயில் நியாயமான பங்கீட்டைக் கோரி போராடிவரும் நிஜர் டெல்ட்டாவின் விடுதலைக்கான இயக்கத்தின் தலைவரான இவர் ஓராண்டு காலம் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை தலைநகர் லாகோசில் உள்ள எண்ணெய் வள நிலையமொன்றின் மீது ஆயுததாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

லாகோஸுக்கு எண்ணெய் வழங்கும் பிரதான விநியோகக் குழாய்கள் தாக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள பிபிசி செய்தியாளர் தெரிவி்த்தார்.

ஆயுதக் குழுத் தலைவர் ஹென்றி ஒக்காவுக்கு மன்னிப்பு வழங்குவதற்கான உடன்பாட்டின் ஓர் அங்கமாக, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் விலக்கிக் கொள்ளப்படுவதற்கு சில மணி நேரம் இருந்த நிலையில் நேற்றிரவு இந்த தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒக்கா 2007 ஆம் ஆண்டில் அங்கோலாவில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.

மூலம்

[தொகு]