பயனர்:மணிவண்ணன்கோவிந்தராஜன்

விக்கிசெய்தி இலிருந்து

மனநோயாளிகளை உருவாக்கக் கூடிய இடமாக இருந்து

வருகிறது என்பது உண்மையா?


இப்போது இருக்கும் சிறைச் சட்டம் நம்நாட்டில்; 1894 ஆம் ஆண்டு ஆங்கில

அரசால் இயற்றப்பட்ட சட்டம். வெள்ளையனுக்கு எதிராக இந்தியத் துணைக் கண்டம்
முழுவதும் கிளர்ச்சிகள் நடந்த காலகட்டம் அது. நமது மக்களை அடக்கி ஒடுக்கி
ஆள ஒரு கடுமையான சிறைச் சட்டம் தேவைப்பட்டது.

அதற்காகக் கொண்டு வரப்பட்டது தான் இன்றைய சிறைச்சட்டம். சிறையில்

இருப்பதே கொடுமையான விசயம். அதிலும் அரசியல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற
சிறைவாசிகளின் நிலைமை மிகக் கொடுமையானது. ஆயுள் தண்டனை என்பது உயிர் உள்ள
வரை சிறையில் இருக்க வேண்டும் என்பது வெள்ளையன் போட்ட சட்டம். இதையே

1947க்குப் பின் சிறு சிறு மாற்றங்கள் செய்து சிறையில் நன்னடத்தையுடன்

அதாவது உயிரிருந்தும் உணர்வற்றுஇ சிறையில் அதிகாரிகள் அடித்தாலும்
உதைத்தாலும்இ நாம் எதிர்த்துப் பேசாமல் 20 ஆண்டுகள் இருந்தால் பொது
மன்னிப்பில் விடுதலை செய்யலாம் என்று மத்திய அரசு கொள்கை முடிவு
எடுத்தது. அதை மாநில அரசுகள் இதுவரையிலும் அதைக்கூட முழுமையாக
பின்பற்றவில்லை.

ஆயுள்சிறைவாசம் என்றால் வெள்ளையர்கள் ஆண்டபோது 20 ஆண்டுகள் என்றும்

பொதுவாக மக்களிடம் 14 ஆண்டுகள்தான் என்றும் அரசுகள் அறிவுரை  மூலம் 14

ஆண்டுகளில் விடுதலைபற்றி பரிசீலிக்கப்படுகிறது என்றும் இருக்கிறது

ஆனால் உச்சநீதிமன்றம் ஒரு தீர்புரையில்அதற்கு விளக்கம் அளிக்க
முற்படும்போது ஆயுள் சிறை என்றால் அம் மனிதனின் ஆயுள்காலம் வரையே என்று
தீர்ப்புகள் வழங்கியது. ஆனால் அரசியல் அமைப்புச்சட்டம் பிரிவு 161ன்படி
தண்டனையை குறைப்பதற்கான அதிகாரத்தை மாநில ஆளுனர்களுக்கு வழங்குகிறது.

அப்படி முன் விடுதலை செய்யப்படும் ஆயுள் சிறைவாசிகளை பாரபட்சம்

பார்க்காமல் விடுதலை செய்யவேண்டும் என்று ஆதே உச்சநீதிமன்றம் பல
தீர்புரைகளில் கூறி இருக்கிறது ஆனால் நடை முறை என்பது வேறு விதமாக
இருக்கிறது.

சிறையில் உள்ள பெரும்பான்மையானவர்கள் படிப்பறிவு அற்ற பாமர ஏழைகள்இ

உழைப்பாளிகள்இ இசுலாமியர்கள் தலித்துகள்இ தொழிலாளிகள். ஒரு தவறுக்காக
தண்டனை வழங்குவது ஒருவனுக்காக இருந்தாலும்இ தண்டனை அனுபவிப்பது அவனின்
ஒட்டுமொத்தக் குடும்பமும் தான். ஒரு சிறையாளியின் குடும்பத்தையும்
சிறைக்கைதியாகவே பார்க்கும் அவல நிலை நம் சமூகத்தில் உள்ளது.

“குற்றத்தை விட்டு விட்டுஇ குற்றவாளியை வெறுக்கும் மனநிலை” தான் இங்கு

அதிகமாகக் காணப்படுகிறது. சிறைவாசியை விட அவன் குடும்பம் படும் அவமானம்
மிகக் கொடுமையானது. சிறையில் இருப்பவர்கள் பெரும்பான்மையானோர்
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளவர்கள். இவர்களால் பணம்
செலவழித்து சொந்தமாக வழக்கறிஞர் அமர்த்தி வழக்கு நடத்த முடியாமல் தண்டனை
பெற்றவர்கள் தான் அதிகம் பேர் உள்ளார்கள்.

கேரளாவில் 7 ஆண்டுகளில் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவதையும்இ

ஆந்திராவில் 5 ஆண்டுகளில் விடுதலை செய்யப்படுவதையும்இ உத்திரபிரதேசத்தில்
கான்சிராம் பிறந்த தினத்தை முன்னிட்டு 10இ000த்திற்கும் மேற்பட்ட
சிறைவாசிகளை மாயவதி அரசு விடுதலை செய்ததையும்இ மகாராஸ்ட்ராஇ
மேற்குவங்கம்இகர்நாடகபோன்ற மாநிலங்களில் ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை
செய்யப்படுகிறார்கள்
ஆனால் தமிழகத்தில் தாங்கள் எப்போழுது விடுதலை செய்யப்படுவோமோ இல்லை
சிறையிலேயே செத்து விடுவோமோ என்று தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும்
நிகழ்வே நடந்து கொண்டிருக்கிறது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 161 மாநில அரசுகளுக்கு தண்டனை

குறைபிற்கான அதிகாரத்தை கொண்டுள்ளது அரசமைப்பு சட்டப்படி நீதிமன்றங்கள்
விதிக்கும் தண்டனையை நிறுத்திவைக்கவோ அல்லது மாற்றி அமைக்கவோ அதில் ஒரு
பகுதியை குறைக்கவோ அல்லது தண்டனையை முற்றிலுமாக நீக்கவோ மாநில
அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெரும் பகுதி அரசுகள் ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை

செய்வதில்லை அப்படியும் முன் விடுதலை செய்தால் சமுக வழக்குகள் என்ற
காரணம் காட்டியும் சில குறிப்பிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டனை
பெற்றவர்கள் என்ற காரணத்தினால் இசுலாமியர்கள்இதலித்கள்இ அரசியல்
காரணங்களுக்காக சிறைப்பட்டவர்களை விடுதலை செய்வதில்லை.

கடந்த ஆட்சியில் 2008ம்வருடம் அரசின் பொதுமன்னிப்பின் கீழ் தமிழக

சிறைகளில் ஆயுள்தண்டனை பெற்ற 1405 சிறைவாசிகள் 7 ஆண்டுகள் கழித்த
நிலையில் விடுதலை செய்யப்பட்டார்கள் ஆனால் அதில் ஒரு முஸ்லீம்
சிறைவாசிகூட இல்லை ஏன் இந்த பாரபட்சம்..?

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு -14கின்படி இந்தியாவில் உள்ள

எந்த நபருக்கும் சட்டத்தின் முன் சம உரிமையும் சட்டத்தின் முன் சமமான
பாதுகாப்பையும் பெற அரசு மறுக்கக்கூடலீது எனவும்.

பிரிவு 15 சமயம்இபாலினம் பிறப்பிடம் அல்லது வேறு எந்த

காரணத்திற்காகவும் எந்த குடிமகனிடத்திலும் அரசு பாகுபாடு செய்யக்கூடாது
எனவும் கூறுகிறது. இதையே வலியுறுத்தி உச்சநீதிமன்றம் பல்வேறு
தீர்ப்புரைகளில் கூறுகிறது ஆனால் உச்சநீதிமன்ற தீர்புரைகள் இங்கு
பின்பற்றுவதில்லை.

ஆயுள் தண்டனை பெற்று 10 .15 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டு ஒருவர்

விடுதலை ஆவான் என்றால்இ அவனால் அவன் குடும்பத்துக்கோ, சமூகத்துக்கோ
எந்தப் பயனும் இல்லை. அவனின் உழைக்கும் சக்தி முழுவதையும் சிறையிலேயே
கழித்து விட்டு அனைவருக்கும் ஒரு பாரமாகவே வாழ வேண்டிய ஒரு நிலை உள்ளது.

தவறு செய்தவனுக்கு ஆயுள் தண்டனை கொடுப்பதால் மட்டும் சமூகத்தில் நடக்கும்

குற்றங்களை தடுத்து நிறுத்திவிட முடியாது. தவறு செய்யும் போது
தண்டிக்கும் சட்டம் இதன் தவறை நினைத்து வருந்தும் போது அவனை வாழ விட
கடமைப்பட்டுள்ளது. எந்த வகையிலும் சமூகம் சட்டத்தைச் சார்ந்து
இருக்கவில்லை. இது ஒரு சட்ட ரீதியான கற்பனையே. மாறாக சட்டமே சமூகத்தைச்
சார்ந்து  இருக்க வேண்டும்.


மனிதனின் வாழ்க்கை நிலை மாறும் போது சட்டமும் மாறித்தான் ஆக வேண்டும். சிறைச் சட்டங்கள் இன்னும் மென்மையாக்கப்பட வேண்டும். “கடுமையான சட்டங்கள்

திறமையான குற்றவாளிகளை உருவாக்கும்” என்பதை கவனத்தில் கொண்டும் சிறையில்
இருப்பவர்கள்பெரும்பான்மையானவர்கள்இஇசுலாமியர்கள்இ தாழ்த்தப்பட்டஇ
பிற்படுத்தப்பட்ட ஏழைஇ எளிய மக்கள் தான் என்பதைக் கவனத்தில் கொண்டும்
இந்த சிறை சட்டத்தை மாற்றி அமைக்கவேண்டும்.

இந்திய சிறை விதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பல்வேறு

போராட்டங்களுக்கு பின் 1983ஆம் ஆண்டு நீதிபதிகள் திரு. ஆனந்த் திரு.

நாராயண் திரு. முல்லா ஆகிய மூவர் குழு ஒன்றை மறைந்த பிரதமர் திருமதி

இந்திராகாந்தி அவர்கள் அமைத்தார். அந்தக் குழு இந்தியாவில் உள்ளஇ தமிழகம்
உட்பட பல முக்கிய சிறைச்சாலைகளுக்கு சென்று ஆய்வு செய்து அதன் இறுதி
அறிக்கையை 1984 ஆம் ஆண்டு நடுவண் அரசுக்கு சமர்பித்தது.

அந்த அறிக்கையில் மிக முக்கியமாக தெரிவித்தது என்ன வென்றால் எந்த ஒரு

கைதியையும் அதிகபட்சமாக 7 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைத்து வைத்து
இருந்தால் அவனின் மனித பண்புகளை மறக்கச் செய்வதுடன்இ அவன் மிகக் கொடூர
சிந்தனையுள்ளவனாக மாறிவிடுவான். இது சமுதாயத்துக்கு கேடு விளைவிக்கும்
செயல் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த கமிசன் அறிக்கை குப்பையில்
போடப்பட்டு விட்டது. தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்கள் ஒரு சிறைவாசியின்
மனமாற்றத்திற்கு 7 ஆண்டுகள் அவனை சிறை வைத்தாலே போதும் என்று
கூறியுள்ளார்.

ஒருவரை ஆயுள் முழுவதும் சிறைவைப்பது அவரின் அனைத்து இயக்கங்களையும்

கட்டுப்படுத்துவது.

அவருக்கும் சமுகத்திற்க்குமான தொடர்பை அறுத்துவிடுவதும். தன்னுடைய

குடும்பத்திற்கான கடமைகளை நிறைவேற்றுவதில் இருந்து தடுப்பதும்.

சிறைவாசியின் மனம் சார்ந்தஇ உடல் சார்ந்த அனைத்தையும் தடுப்பதும்

மொத்தத்தில் செத்த பிணத்திற்க்கு சமமானதும் ஒன்றுதான்.

“ மதுரை லீலாவதி “ கொலைவழக்கில் சிறைப்பட்டவர்கள் எல்லாம் சில

ஆண்டுகளுக்குள் விடுதலையாகிவிடஇ அப்பாவிகள்இ அரசியல் போராளிகள் என
எண்ணற்றோர் சிறையில் இருக்கிறார்கள்.

1. ’அபுதாகிர்’ - 10ஆண்டுகளுக்கும் மேலாக தனது 17 வயதில் இருந்து

சிறையில் இருக்கிறார். இவரது பெற்றோர் அண்ணன் சிறையிலேயே இறந்து
இருக்கிறார்கள். இவருக்கு ளுடுநு என்கிற கொடிய நோய் இருக்கிறது. இது
இவரது ஒவ்வொரு உடல் உறுப்புகளையும் செயலிழக்கச் செய்து தற்போது கண்
பார்வைஇ சிறுநீரகம் என முக்கிய உடல் உறுப்புகள் செயலிழந்து மரணத்தினை
எதிர்பார்த்திருப்பவரை விடுதலை செய்து வீட்டில் அமைதியான முறையில்
மரணத்தினை எதிர்கொள்ளவேண்டுமென்று சொன்னபிறகும் விடுதலை செய்யப்படவில்லை.

தற்போது அவரது விடுதலை குறித்து அரசு ஏதும் பேசவில்லை..

2. ’பக்கா’ என்கிற ’விஜயா’ க்டந்த 23 வருடங்களாக சிறையில் இருக்கும்

பெண். மன நிலை பாதிக்கப்பட்டு இருந்தாலும் விடுதலை செய்யப்படவில்லை.

இந்தியாவிலேயே அதிக நாட்கள் சிறையில் இருக்கும் பெண்.

3. ’நளினி’ ‘ஜெயக்குமார்’ ராபர்ட் பயஸ்’ ‘ரவிச்சந்திரன்’ 22 ஆண்டுகள்

சிறையில் இருக்கும் ராஜீவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.

4. தோழர். ‘துரைப்பாண்டி’ தலித் மக்களின் உரிமைக்காக போராடி சிறை

சென்றவர். 10 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார்.

5. வீரப்பனுடைய அண்ணன் என்கிற காரணத்துக்காக 26 ஆண்டுகளிக்கும் மேலாக

சிறையில் இருக்கும் ‘மாதையன்’ . கண்பார்வையினை இழந்த பின்னரும் சிறையில்
இருந்து விடுதலை செய்யப்படவில்லை. தன்னை கருணைக் கொலை
செய்துவிடவேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

இவ்வாறு இசுலாமியர் என்கிற காரணத்தினாலேயே பலர் தமிழ்த் தேசியவாதிகள்

அரசியல்-சமூக விடுதலைப் போராளிகள் என எண்ணற்றோர் சிறையில் நீண்ட நாட்களாக
வாடுகிறார்கள். நேற்று இவர்களுக்கு நடைபெற்றதை இன்று இடிந்தகரை
மக்களுக்கும் ஏனைய போராடும் இயக்கத் தோழர்களுக்கும் நிகழ்கிறது.

இசுலாமியர் என்பது தனித்த இனமல்ல. அவர்கள் தமிழர்களே இந்துத்துவத்தின்

சாதியத்தால் மதம் மாறியவர்களே. நம்பிக்கை வேறு வேறாக இருந்தாலும்
தமிழர்கள் தமிழர்களே...

இப்பொழுது சொல்லுங்கள் அண்ணா பிறந்த நாளில் இவர்களைபோன்றவர்கள் விடுதலை

செய்யப்படவேண்டுமா அல்லது அரசியல் கிரிமினல்கள் விடுதலை செய்யப்பட
வேண்டுமா என்று....!

சிறைச் சாலை இன்றைக்கு மனநோயாளிகளை உருவாக்கக் கூடிய இடமாக இருந்து

வருகிறது என்பது உண்மையா? என நமக்குள் கேள்வி எழுகிறது !