பயனர் பேச்சு:Mayooranathan
தலைப்பைச் சேர்வாருங்கள், Mayooranathan!
விக்கிசெய்திகளுக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிசெய்திகள் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்கிசெய்திகளுக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கத்தை ஒருமுறை பார்க்கவும்:
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிசெய்திகள் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
புதிய செய்தி ஒன்றை எழுத, செய்திக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.
--Kanags 10:28, 31 ஜூலை 2009 (UTC)
செய்தியை முன்பக்கத்தில் இணைப்பது
[தொகு]மயூரநாதன், விக்கிசெய்திகளுக்கு வரவேற்கிறேன். உங்கள் பயன் தரும் செய்திக்கு நன்றி. முன்பக்கத்தில் நான்கு முக்கிய செய்திகளைக் காட்சிப்படுத்தலாம். முன்பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்கு கட்டாயம் செய்தி தொடர்பான ஒரு படிமம் இருத்தல் வேண்டும். இப்போதைக்கு விக்கிகொமன்சில் உள்ள படிமங்களையே இணைக்க முடியும். தனியாகவிக்கிசெய்திகளுக்கு படிமங்களைப் பதிவேற்றத் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து வழு பதியப்பட்டுள்ளது. நீங்களும் உங்கள் ஆதரவை அங்கு சென்று பதியுமாறு வேண்டுகிறேன். மேலும், முன்பக்கத்தில் 4 lead article வார்ப்புருக்களை இணைத்திருக்கிறேன். செய்தி ஒன்றை முன்பக்கத்தில் தெரியப்படுத்த விரும்பினால் அங்குள்ள நான்கு செய்திகளில் ஒன்றை அப்புறப்படுத்தி அதன் மேல் இடலாம். அத்துடன் உங்கள் செய்தி "வார்ப்புரு:நடப்புச் செய்திகள்" என்ற என்ற வார்ப்புருவில் அந்தந்தத் தேதியினுள் சேர்க்க வேண்டும். ஏனைய கட்டுரைகளை பார்த்தீர்களானால் விளங்கும். நன்றி.--Kanags 10:28, 31 ஜூலை 2009 (UTC)