பலாலி இராணுவ தளத்தின் மீது வான்புலிகள் தாக்குதல்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

செவ்வாய், ஏப்ரல் 24, 2007

யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா பலாலி கூட்டுப் படைத்தளம் மீது இன்று அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையினர் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் பலாலி தளத்தில் இருந்த ஆயுதக்கிடங்கு அழிக்கப்பட்டதாகவும் 6 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் வான்பரப்பிற்குள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.20 மணியளவில் நுழைந்த தமிழீழ வான்படையினரின் இரு வானூர்திகள் 10-க்கும் அதிகமான குண்டுகளை பலாலி கூட்டுப்படைத்தளம் மீது வீசியுள்ளன. விடுதலைப் புலிகள் நடத்திய வான்வழித் தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது 6 இராணுவத்தினர் கொல்லப்பட்டு மேலும் 6 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]