உள்ளடக்கத்துக்குச் செல்

பாகிஸ்தானில் கைப்பந்தாட்ட மைதான தற்கொலைத் தாக்குதலில் 88 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சனவரி 2, 2010

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் கைப்பந்துச் சுற்றுப்போட்டி ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தினர் மீது காரில் வந்த தற்கொலைக் குண்டுதாரி குண்டை வெடித்துத் தாக்கியதில் குறைந்தது 88 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.


இரு கைப்பந்து அணிகளையும் பார்க்க கூட்டம் கூடியபோது, அந்த தற்கொலையாளி களத்துக்குள்ளே வண்டியை செலுத்திவந்து வெடிக்கச் செய்ததாக செய்திகள் கூறுகின்றன.


சுற்றிவரவுள்ள கட்டிடங்களை நிர்மூலம் செய்த குண்டுவெடிப்பு, மக்களை இடிபாடுகளில் சிக்கச் செய்தது.


அண்மைக் காலம் வரை தலிபான்களின் கோட்டையாக பார்க்கப்பட்ட வரிசிஸ்தானின் லக்கி மார்வத் நகருக்கு அருகே உள்ள இந்த தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து தலிபான்களை பாகிஸ்தான் இராணுவமும், உள்ளூர் கிளர்ச்சிக்காரர்களும் அண்மையில்தான் விரட்டியிருந்தனர்.


பாகிஸ்தானில் கடந்த மூன்று மாதங்களில் இடம்பெற்ற வன்முறைகளில் மொத்தம் 600 பேர் கொல்லப்பட்டனர்.

மூலம்

[தொகு]