பாகிஸ்தானில் பேருந்து விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சனவரி 13, 2010


பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பாதுகாப்பற்ற கடவை ஒன்றைத் தாண்டும் போது தொடருந்துடன் மோதியதில் குறைந்தது 8 மாணவர்கள் உயிரிழந்தனர்.


மியான் சன்னு என்ற நகரில் இடம்பெற்ற இவ்விபத்தில் மேலும் 12 சிறுவர்கள் காயமடைந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பேருந்து சாரதியும் உயிரிழந்தார்.


பயணிகள் தொடருந்தில் பயணம் செய்தவர்கள் எவரும் காயமடையவில்லை.


பாகிஸ்தானில் ரெயில்வே கடவைகள் பொதுவாக ஆளற்றவை, மற்றும் பாதுகாப்பற்றவை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் விபத்துக்கள் இங்கு அடிக்கடி இடம்பெறுவதுண்டு.


இன்று புதன்கிழமை காலையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது பனிப்புகார் அவ்வழியில் நிறைந்திருந்ததால் இதனால் பேருந்து குவெட்டாவில் இருந்து லாகூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தொடருந்துடன் மோதியதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மூலம்[தொகு]