பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் அமெரிக்க இராணுவத்தினர் உட்பட 9 பேர் உயிரிழப்பு
வெள்ளி, பெப்ரவரி 5, 2010
- 17 பெப்ரவரி 2025: இசுலாமாபாத் முற்றுகையை முறியடிக்க இராணுவம் வரவழைப்பு
- 17 பெப்ரவரி 2025: ஆப்காத்தானில் அமெரிக்கா அனைத்து குண்டுகளின் தாய் எனப்படும் பெரும் வெடிகுண்டை போட்டது
- 17 பெப்ரவரி 2025: பள்ளிவாசல் தாக்குதலை தொடர்ந்து பாக்கித்தான் 100இக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்றது
- 17 பெப்ரவரி 2025: பாக்கித்தானில் காவலர் பயிற்சி கல்லூரியை மூன்று தற்கொலை தாரிகள் தாக்கியதில் பலர் பலி
- 17 பெப்ரவரி 2025: பாக்கித்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா ஊடுறுவி தாக்கியது
பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய வடமேற்கு மாநிலத்தில் உள்ள டிர் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமையன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு நிகழ்வில் 4 பாடசாலை மாணவிகள், மூன்று அமெரிக்க இராணுவத்தினர் உட்பட 9 பேர் உயிரிழந்தார்கள். மற்றும் 70 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 41 பேர் மாணவிகள் ஆவார்கள். 4 பாகிஸ்தான் நிருபர்களும், 5 இராணுவ வீரர்களும் காயம் அடைந்தனர்.

தாலிபான்கள் இத்தாக்குதலுக்கு உரிமை கோரியிருக்கிறார்கள். இக்குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் தாங்கள் 35 பேரை தடுத்து வைத்துள்ளதாக பாகிஸ்தானின் காவல்துறை தெரிவித்துள்ளது.
தமது பாதுகாப்பு படையினர் பாகிஸ்தானின் துணை இராணுவப் படையினருக்கு பயிற்சி அளித்து வந்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகிறார்கள்.
அமெரிக்கர்கள் பயணித்துக் கொண்டிருந்த அந்த வாகனம் குறிப்பாக திட்டமிட்டு குண்டுதாரியால் தாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்த வாகனத்தின் பயணம் குறித்த தகவல்கள் முன்னரே கசிந்ததா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
மூலம்
[தொகு]- Aid workers die in Pakistan blast, பிபிசி, பெப்ரவரி 3, 2010
- Blast hits Pakistan school opening, அல்ஜசீரா, பெப்ரவரி 3, 2010
- US Troops Among Those Killed in Pakistan Blast, வொய்ஸ் ஒஃப் அமெரிக்கா, பெப்ரவரி 3, 2010
- Pakistan Arrests 35 in U.S. Soldiers’ Deaths, த நியூயோர்க் டைம்ஸ், பெப்ரவரி 4, 2010