உள்ளடக்கத்துக்குச் செல்

பாக்கித்தானின் முன்னாள் தலைவர் முசாரப் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், மார்ச்சு 31, 2014

பாக்கித்தான் நீதிமன்றம் ஒன்று முன்னாள் அரசுத்தலைவர் பெர்வேசு முசாரப் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. 2007 ஆம் ஆண்டில் அரசியலமைப்புச் சட்டத்தை சட்டவிரோதமாக இடைநிறுத்தி, அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியது தொடர்பாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், மரணதண்டனையை அவர் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் நோக்கம் கொண்டவை என அவர் கூறியுள்ளார்.


70 வயதாகும் முசாரப் 2001 ஆம் ஆண்டு முதல் 2008 வரை அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார். 2008 ஆம் ஆண்டில் நாட்டில் இருந்து வெளியேறி 2013 மார்ச் மாதத்தில் நாடு திரும்பினார்.


மூலம்

[தொகு]