பாக்கித்தானில் இடம்பெயர்ந்தோர் முகாமில் இரட்டைக் குண்டுவெடிப்பு, பலர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஏப்பிரல் 17, 2010

வடமேற்குப் பாக்கித்தானில் இடம்பெயர்ந்தோர் முகாம் ஒன்றில் இன்று இரண்டு தற்கொலைக் குண்டுகள் வெடித்ததில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 30 பேர் காயமடைந்தனர்.


கோஹாட் நகருக்கு வெளியே உள்ள கச்சா புக்கா என்ற முகாமிலேயே சில நிமிட இடைவெளிக்குள் இரண்டு குண்டுகள் வெடித்தன.


நிவாரணப் பொருட்கள் வாங்குவதற்காக வரிசையில் நின்றிருந்த அகதிகள் மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.


இசுலாமியப் போராளிகள் மீது பாக்கித்தான் படையினர் தாக்குதல்களை நடத்திவரும் ஆப்கானிய எல்லையில் ஒரு மில்லியன் மக்கள் வரையில் இடம்பெயர்ந்துள்ளனர்.


"தற்கொலைக் குண்டுதாரிகளின் வெடித்த உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன," என கோஹாட் காவல்துறை தலைவர் தெரிவித்தார்.


நாடு முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் 3,200 பேர் தற்கொலைத் தாக்குதல்களில் இறந்துள்ளனர்.

மூலம்[தொகு]