பாக்கித்தானில் பேருந்துக் குண்டுவெடிப்பில் 11 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூன் 15, 2013

பாக்கித்தானின் வடமேற்கு நகரான குவெட்டாவில் பெண்கள் பல்கலைக்கழக மாணவிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வெடித்ததில் குறைந்தது 11 மாணவிகள் கொல்லப்பட்டனர். மேலும் 22 பேர் காயமுற்றனர்.


பேருந்தில் வைக்கப்பட்டிருந்த கைவினை வெடிகுண்டு ஒன்றே வெடித்துள்ளதாக காவல்துறைத் தலைவர் சுபைர் மகுமுது தெரிவித்தார்.


பலுச்சித்தான் மாகாணத் தலைநகரான குவெட்டாவில் அண்மைக்காலமாக போராளிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. சில தாக்குதல்கள் பிரிவினைவாதிகளால் நடத்தப்பட்டிருந்தாலும், மேலும் பல பெண்களுக்கான கல்வியை எதிர்த்துப் போராடும் இசுலாமியத் தீவிரவாதிகளால் நடத்தப்படுகின்றன. கடந்த மாதம், குவெட்டாவில் பாதுகாப்புப் படையினர் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.


மூலம்[தொகு]