பாக்கித்தானில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்தது, இடிபாடுகளிடையே பலர் அகப்பட்டனர்
- 26 நவம்பர் 2017: இசுலாமாபாத் முற்றுகையை முறியடிக்க இராணுவம் வரவழைப்பு
- 13 ஏப்பிரல் 2017: ஆப்காத்தானில் அமெரிக்கா அனைத்து குண்டுகளின் தாய் எனப்படும் பெரும் வெடிகுண்டை போட்டது
- 17 பெப்பிரவரி 2017: பள்ளிவாசல் தாக்குதலை தொடர்ந்து பாக்கித்தான் 100இக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்றது
- 25 அக்டோபர் 2016: பாக்கித்தானில் காவலர் பயிற்சி கல்லூரியை மூன்று தற்கொலை தாரிகள் தாக்கியதில் பலர் பலி
- 29 செப்டெம்பர் 2016: பாக்கித்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா ஊடுறுவி தாக்கியது
திங்கள், பெப்பிரவரி 6, 2012
பாக்கித்தானின் லாகூர் நகரில் தொழிற்சாலைக் கட்டடம் ஒன்று இன்று காலையில் இடிந்து வீழ்ந்ததில், பலர் இடிபாடுகளிடையே சிக்குண்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டடம் இடிந்த போது பல சிறுவர்கள் அங்கு பணியில் ஈடுபட்டிருந்தனர் எனவும் அவர்களும் அங்கு சிக்குண்டிருக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
மூன்று மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததற்கு வாயு வெடிப்பே காரணமாக இருக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொழிற்சாலைக் கட்டடமும், அதனருகே இருந்த இரு வீடுகளும் முழுமையாக இடிந்து வீழ்ந்துள்ளன. இடிபாடுகளிடையே இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உள்லே சிக்குண்டவர்களை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர். 30 முதல் 100 வரையானோர் உள்ளே சிக்குண்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்
[தொகு]- Pakistan building collapses, trapping many in Lahore, பிபிசி, பெப்ரவரி 6, 2012
- Pak: 2 Killed, 60 Feared Trapped in Building Collapse, அவுட்லுக், பெப்ரவரி 6, 2012