உள்ளடக்கத்துக்குச் செல்

பாக்கித்தான் சந்தைக் குண்டுவெடிப்பில் 17 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், திசம்பர் 17, 2012

வடமேற்குப் பாக்கித்தானில் கைபர் என்ற பழங்குடியினர் வாழும் பகுதியில் உள்ள சந்தை ஒன்றில் இன்று இடம்பெற்ற வாகனக் குண்டுவெடிப்பு ஒன்றில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர், 70 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இறந்தவர்களில் பலர் பெண்களும் சிறுவர்களும் ஆவர்.


எந்தக் குழுவும் இதுவரையில் இக்குண்டுவெடிப்புக்குப் பொறுப்பேற்கவில்லை. மாவட்டத்தின் அரசு அலுவலகங்கள் பல இப்பகுதியில் அமைந்துள்ளன. பல வாகனங்களும் கட்டடங்களும் சேதமடைந்துள்ளன.


பெசாவர் விமானநிலையத்தில் போராளிகளுக்கும் படையினருக்கும் இடையே இடம்பெற்ற பெரும் மோதலுக்கு அடுத்த நாள் இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. விமான நிலைய மோதலில் குறைந்தது 10 போராளிகள் கொல்லப்பட்டனர். இவர்களில் பலர் உஸ்பெக்கித்தானைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. பாக்கித்தானியத் தலிபான்கள் தாமே இத்தாக்குதலை நடத்தியதாக அறிவித்துள்ளனர்.


மூலம்[தொகு]