பாளையங்கோட்டைத் தூய சவேரியார் கல்லூரியில் நாவா நாள்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சனவரி 17, 2014 நாட்டார் வழக்காற்றியல் துறைக்கு அரும்பணியாற்றிய தமிழகப் பேராசிரியர் நா. வானமாமலை அவர்களின் நினைவு நாளினை முன்னிட்டு, பாளையங்கோட்டைத் தூய சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் துறையின் சார்பில் ஆண்டுதோறும் நாவா நாள் நிகழ்வுகள் நடத்தப்பெற்று வருகின்றன.

இந்த ஆண்டு நாவா நளினை முன்னிட்டு, பெப்ரவரி 3 திங்கட் கிழமை அன்று, காலை 10 மணி அளவில், பேராசிரியர் நா. வானமாமலை நினைவுச் சொற்பொழிவு பாளையங்கோட்டைத் தூய சவேரியார் கல்லூரியிலுள்ள கௌசானல் அரங்கில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் திரு. பொ. வேல்சாமி திருக்குறள் - திருவள்ளுவர் - பதிப்புகள் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றுகிறார்.

இந்நிகழ்ச்சியை நாட்டார் வழக்காற்றியல் துறை ஒருங்கிணைக்க உள்ளது.