உள்ளடக்கத்துக்குச் செல்

பிலிப்பைன்சில் பயணிகள் படகு கவிழ்ந்ததில் பலரைக் காணவில்லை

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, செப்டெம்பர் 6, 2009, மணிலா:


பிலிப்பைன்சில் பயணிகள் படகு கவிழ்ந்ததில் குறைந்தது ஒன்பது இறந்துள்ளனர். மேலும் பலரைக் காணவில்லை.


950க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு போன படகு தென்பகுதி நகரான சம்போங்காவுக்கு அருகே கவிழ்ந்தது. அதிலிருந்த நூற்றுக்கணக்கான பலர் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதுவரையில் ஐவரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.


காலநிலை சாதகமாக இருந்தமை மீட்புப் பணிகளுக்கு உதவியாக அமைந்தது என்று பிலிப்பைன்ஸ் நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கில்பேர்ட்டோ தியோடோரோ அவர்கள் பி.பி.சி.யிடம் தெரிவித்தார்.


அமிழ்ந்து கொண்டிருக்கும் படகை விட்டு வெளியேறும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்ட சமயம் நல்ல வேளையாக அருகே வேறு படகுகளும் இருந்தமையும் பலரை மீட்க உதவியது என்று அவர் கூறினார்.


இந்தப் படகு அமிழ்ந்ததற்கு என்ன காரணம் என்று இன்னும் தெளிவாகவில்லை.


மூலம்

[தொகு]