உள்ளடக்கத்துக்குச் செல்

பிலிப்பைன்ஸ் நாட்டு முதல் பெண் அதிபர் அக்கினோ இறப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஆகத்து 1, 2009, மணிலா, பிலிப்பைன்ஸ்


பிலிப்பைன்ஸ் நாட்டின் முதல் பெண் அதிபர் கொரசோன் அக்கினோ மரணம் அடைந்தார். அவருக்கு வயது 76. கடந்த 1986-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தார். கடந்த ஆண்டு முதல் அவர் புற்றுநோயால் அவதிப்பட்டார். அதை தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கிட்டத்தட்ட 16 மாத கால போராட்டத்துக்கு பிறகு அவர் நேற்று மரணம் அடைந்தார்.


நேற்று அதிகாலை 3.18 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் உயிர் பிரிந்தது. அவர் மரணத்தையொட்டி 10 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அதிபர் குளோரியா அர்ரோயோ அறிவித்தார்.


அகினோ செல்வசெழிப்பான குடும்பத்தை சேர்ந்தவர். இவர் அமெரிக்காவில் கல்வி பயின்றார். தொடக்கத்தில் இவர் அரசியலில் நுழையவில்லை.


எதிர்க்கட்சி தலைவராக இருந்த அவரது கணவர்பெனிக்னோ நினோய் அகினோ நாடுகடத்தப்பட்டார். கடந்த 1985ம் ஆண்டு நாடு திரும்பிய அவர் மணிலா விமான நிலையத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.


அதைத் தொடர்ந்து கணவர் நடத்திய பிலிப்பைன்ஸ் குடியரசு கட்சிக்கு தலைவராகி வழிநடத்தினார். அப்போது ஜனாதிபதியாக இருந்த மார்கோசுக்கு எதிராக 1986ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மக்கள் ஆதரவுடன் ஜனாதிபதியாக பதவி ஏற்றார். பிலிப்பைன்ஸ் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றார்.

மூலம்

[தொகு]