உள்ளடக்கத்துக்குச் செல்

பீரின் சுவை ஆணின் மூளைக்கு வேதியியல் வெகுமதியாகவுள்ளது

Checked
விக்கிசெய்தி இலிருந்து
(பீரின் சுவை ஆணின் மூளைக்கு வேதியியல் வெகுமதியாகயுள்ளது இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திங்கள், ஏப்பிரல் 22, 2013

பீரின் (ஒரு வகை மதுபானம்) சுவை மனிதனின் மூளையை சுறுசுறுப்பாக்கி மேலும் அப்பானத்தை அருந்தத் தூண்டுகிறது என அண்மைய ஆய்வு தெரிவிக்கின்றது.


சிறிய அளவு பீர் டோப்பமைனை வெளியிடுகிறது.

ஏப்பிரல் 15 அன்று வெளியான நியூரோசைக்கோபார்மக்காலசி (Neuropsychopharmacology) இதழின் ஆய்வு அறிக்கை ஒன்றில், இந்தியானா பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் உள்ள ஆய்வாளர்கள் 49 ஆண்களில் சோதனை செய்து இதனைக் கண்டறிந்துள்ளனர். அருந்திய சிறிய அளவு பீரின் சுவை மட்டுமே, மூளையின் வேதியியல் வெகுமதிக் குறிகையான டோபமைனை (dopamine) வெளியிடுகிறது.


டோபமைன் என்பது மனித உடலில் இருந்து வெளியாகும் ஒரு வேதிப்பொருள் ஆகும். அது மது மற்றும் மருந்துகள் பயன்பாட்டிற்கும், இன்பமுறுதலுக்கும் ஆகும். குடும்ப குடிப்பழக்கத்தில் உள்ள ஆண்களில், டோபமைன்னு வெளிப்பாடானது மிக பெரியதாகும்.


ஆய்வாளர்கள் 15 மி.லி பீரும், விளையாட்டின் பானமும் 15 நிமிட இடைவேளை விட்டு பங்குபெற்றவர்களுக்கு கொடுத்தனர். பிறகு அவர்களின் மூளையை துலாவிப் பார்த்ததில் அதில் டோபமைன் இருந்ததை அறிந்தனர். ஆய்வாளர்கள் 15 மி.லி பீரும் உடலில் மது அடைவை அதிகரிக்காது என்றும், நஞ்சுத்தன்மையை கொடுக்கக்கூடியதாகாது என்றும் கூறினர்.


கதிர்வீச்சைப் பயன்படுத்தும் ஒரு படிம தொழினுட்பமான நேர்மின்னணு உமிழ் பரு வரைவினால் (positron emission tomography) நிறைவேற்றிய மூளை துலாவலானது மனித மூளையின் முப்பரிணாம படிமங்களை காட்டுகிறது.


இந்த ஆய்வுக்குழுவின் தலைவர் டாக்டர் டேவிட் ஏ. காரிக்கென், "இதுவே மது நஞ்சுத்தன்மையில்லாது மனிதனின் மூளை வெகுமதியகத்தில் டோபமைன் அதிகரிப்பதாக மனிதர்களில் நடத்தப்பட்ட முதல் ஆய்வு" எனக் கூறினார்.


பொருட்களின் பயிற்சி, கொள்கை மற்றும் பயன்பாடு ஆகியற்றின் பேராசிரியரான நியூகாசில் பல்கலைக்கழகத்தின் பீட்டர் ஆன்டர்சன் "இது ஒரு வகை குறிப்புகள். சுவை, மணம், படிமம் ஆகியவை விரும்பும் படியாக செய்யக்கூடியது. இது ஆச்சரியம் அளிப்பதாக இல்லை. சுவை விரும்பக்கூடியதாக இருந்தால், அதன் பிரிதிபலிப்பு மூளையின் செயல்பாட்டில் தெரியும்." எனக் கூறியுள்ளார்.


மூலம்

[தொகு]