பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த கிருமிகள் பிரான்ஸ் நாட்டில் காணவில்லை

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஏப்பிரல் 17, 2014

பிரான்ஸ் நாட்டின் ஆய்வுக்கூடத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த வைரஸ் கிருமிகளின் பாதுகாப்பு குப்பிகளைக் காணவில்லை என்று பாஸ்டர் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களில் மிகவும் சிறந்ததாக விளங்குவது பாஸ்டர் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 2300 சார்ஸ் வைரஸ் கிருமிகளை 29 குப்பிகளில் பாதுகாப்பாக வைத்திருந்தது. இந்த 29 குப்பிகளும் தற்போது காணாமல் போய்விட்டதாக அந்நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனம் 1980 ஆண்டு எச். ஐ. வி கிருமிகளை தனிமைப்படுத்தும் ஆராய்ச்சியை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ஸ் வைரஸ் கிருமியின் தோற்றம்

மூலம்[தொகு]