புதுக்கோட்டை நொடியூர் கல்வெட்டில் தகவல்

விக்கிசெய்தி இலிருந்து

புதுக்கோட்டை நொடியூர் கல்வெட்டில் தகவல்[தொகு]

மருதன் ஏரிக்கு குமிழி அமைத்த முத்தரையன்[தொகு]

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகில் உள்ள, நொடியூர் கிராமத்தில், 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதில், மருதன் ஏரிக்கு, குமிழி அமைத்து கொடுத்த ரணசிங்க முத்தரையன் பற்றிய செய்தி உள்ளது.புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகம் கண்டுபிடித்தனர் மேலும் வரலாற்று தேடலில் ஈடுபட்டனர். அப்போது, ஆதித்த சோழர் காலத்தைச் சேர்ந்த, முத்தரையர் கல்வெட்டை கண்டுபிடித்தனர்.[1]

இதுகுறித்து, தொல்லியல் ஆய்வுக் கழகம் கூறியதாவது:[தொகு]

நொடியூர்பட்டிணம் என்ற இவ்வூர், கீழ்செங்கிளி நாடு என்ற துணை நிர்வாக மண்டலமாக, 17ம் நூற்றாண்டு வரை விளங்கியது. இவ்வூர் ஏரியில், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டில், ஆதித்த சோழனின் பத்தாவது ஆட்சியாண்டில், கீழ்செங்கிளி நாட்டைச் சேர்ந்த, மங்கலத்து விலக்க ஏரன் ரணசிங்க முத்தரையன் என்பவர், நீர் திறப்பை கட்டுப்படுத்தும் குமிழியை அமைத்து கொடுத்தார் என்ற தகவல் உள்ளது. கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள், 1,100 ஆண்டுகள் பழமையானவை. மேலும், ஏரன், சிங்கன், விலக்கன் என்ற அடைமொழிகளோடு முத்தரையன் பெயர் அமைவதால், பல்லவர்களுக்கும், உழவர்களுக்கும் உள்ள தொடர்பை அறிய முடிகிறது. காடுகளை அழித்து மருத நிலம் உருவாக்கிய பின், விவசாயத்திற்காக ஏரி நீர் பயன்படுத்தப்பட்டது என்பதை, 'மருதன் ஏரி' என்ற, பெயர் உணர்த்துகிறது. குமிழியின் அவசியம்தமிழகத்தின் பல பகுதிகள், வடகிழக்கு பருவமழை காலமான, இரண்டு மாதங்கள் மட்டுமே மழை பெய்யும். அந்த நீரை கொண்டு தான், ஆண்டின் நீர்த்தேவையை சமாளிக்க வேண்டும். அதற்காக, பழந்தமிழர்கள், ஆயிரக்கணக்கான ஏரி, குளங்களை வெட்டியதோடு, குமிழிகளையும் அமைத்தனர். அவற்றின் பராமரிப்புக்காக, பாசன வரியையும் வசூலித்துள்ளனர். ரணசிங்க முத்தரையன் பல்லவ, சோழர்களின் கூட்டுப் படைகள், பாண்டியர்களை வெற்றிகண்ட பின், பல்லவர்களின் நேரடி துணை ஆட்சியாளர்களான முத்தரையர்கள், சோழர்களின் நிர்வாக மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டனர்.அதற்கு சான்றாக, ஆதித்த சோழன் காலத்திய, ரணசிங்க முத்தரையன் கல்வெட்டு விளங்குகிறது. இதுவே, இப்பகுதியில் கிடைத்த, மிகப் பழமையான கல்வெட்டு. இவ்வாறு அவர் கூறினார். [2]

மூலம்[தொகு]


  1. மருதன் ஏரிக்கு குமிழி அமைத்த முத்தரையன்
  2. 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு