புதுப்புது சாகசம் செய்யும் உருசியப் பிரதமர் பூட்டின்

விக்கிசெய்தி இலிருந்து
thumb

திங்கள், ஆகத்து 3, 2009, மாஸ்கோ:


உருசியப் பிரதமர் விளாடிமீர் பூட்டின் (56) அதிரடியாக ஏதாவது செய்து பரபரப்பை ஏற்படுத்துபவர். ஆண் அழகன் போன்ற கட்டுமஸ்தான உடலைக் கொண்ட அவர் ஜுடோ தற்காப்பு கலையில் பிளாக் பெல்ட் பெற்றவரும் கூட.


அவரது சாகச பட்டியலில் இதுவரை, சூப்பர்சானிக் போர் விமானத்தில் பயணம் செய்தது, காட்டுக்குள் சென்று சைபீரிய புலியை வேட்டையாடியது என்பவைதான் இருந்து வந்தன.


நேற்று பூட்டின், உலகின் மிகவும் ஆழமான ஏரியான பைக்கால் ஏரியில் மிர்-2 என்ற சிறிய நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்து 4 ஆயிரத்து 600 அடி ஆழம் வரை சென்றார். அங்கிருந்த அற்புதமான வாயு படிகங்களையும், இயற்கை வளங்களையும் பார்த்து பிரமித்தார். 41/2 மணி நேரம் ஏரியின் அடியில் அவர் தங்கியிருந்தார்.


இதேபோல் வானவெளிக்கு பயணம் செய்வீர்களா, என்று அவரிடம் கேட்டபோது, சிரித்துக் கொண்டே `எனக்கு பூமியிலேயே நிறைய வேலைகள் இருக்கின்றன` என்றார்.

மூலம்[தொகு]

  • தினத்தந்தி