உள்ளடக்கத்துக்குச் செல்

பூட்டான் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி

Checked
விக்கிசெய்தி இலிருந்து
பூட்டானில் இருந்து ஏனைய செய்திகள்
பூட்டானின் அமைவிடம்

பூட்டானின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

ஞாயிறு, சூலை 14, 2013

பூட்டானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் மக்கள் சனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூட்டான் விடுதலை பெற்ற பின்னர் இடம்பெறும் இரண்டாவது தேர்தல் இதுவாகும்.


தோல்வியடைந்த ஆளும் துருக் புவென்சும் சோப்கா கட்சி பூட்டான் அரசருடன் நட்புறவு கொண்டுள்ளது. 80% வாக்காளர்கள் வாக்களித்தனர். மன்னராட்சியில் பொருளாதாரச் சீர்கேடு, அயல் நாடான இந்தியாவுடனான பிரச்சினைகள் இத்தேர்தல் களத்தில் முக்கியமாக அலசப்பட்டன.


2008 ஆம் ஆண்டு பூட்டான் மன்னர் தமது நிறைவேற்று அதிகாரங்களைக் களைந்ததை அடுத்து அங்கு மக்களாட்சி இடம்பெற்று வருகிறது.


மொத்தம் 47 நாடாளுமன்ற இடங்களில் எதிர்க்கட்சியினர் 32 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மக்கள் சனநாயகக் கட்சியின் தலைவர் செரிங்கு தொப்கே பிரதமராக அறிவிக்கப்படுவார் என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இந்தியாவுடனான உறவுகள் அண்மைக்காலங்களில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். பல்லாண்டு காலமாக வணிக மற்றும் வெளிநாட்டு உறவுகளில் இந்தியாவிலேயே பூட்டான் தங்கி வந்துள்ளது. ஆனாலும், அண்மையில் இந்தியா பூட்டானுக்கான எரிபொருள் மற்றும் எரிவாயு மானியத்தைப் பெருமளவு குறைந்த்திருந்தது. பூட்டான் அண்மைக்காலங்களில் சீனாவைச் சார்ந்து சென்று கொண்டிருப்பதே இதற்குக் காரணம் என எதிர்க்க்கட்சியினர் கூறுகின்றனர்.


மூலம்

[தொகு]