பெரியார் பல்கலைக் கழகத்தில் செஞ்சுருள் சங்கத்தின் திட்ட அலுவலர் சந்திப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் இணைவு பெற்றுள்ள கல்லூரிகளிலும், உறுப்புக்கல்லூரிகளிலும் செயல்பட்டுவரும் செஞ்சுருள் சங்கத்தின் திட்ட அலுவலர் சந்திப்பு 20.02.2015 அன்று காலை 10.30 மணியளவில், ஆட்சிப்பேரவைக் கூட்டதில் நிகழ உள்ளது.

செஞ்சுருள் சங்கம் என்பது பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் எச்.ஐ.வி/ எய்ட்சு மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக செயல்பட்டு வரும் அமைப்பு ஆகும். இந்த அமைப்பினை தமிழ் நாடு மாநில எய்ட்சு கட்டுப்பாட்டுச் சங்கம் நெறிப்படுத்தி வருகின்றது.

பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மாண்பமை பேராசிரியர் பேராசிரியர் முனைவர் சி. சுவாமிநாதன் இந்நிகழ்வைத் தொடங்கிவைத்து விழாப்பேருரை வழங்க உள்ளார். பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் க. அங்கமுத்து இந்நிகழ்விற்கு தலைமையேற்க உள்ளார்.

பெரியார் பல்கலைக் கழக தேசிய நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர். சு. நந்த குமார் இந்நிகழ்வினை ஒருங்கிணைக்க உள்ளார்.