பெர்முடா முக்கோணம்

விக்கிசெய்தி இலிருந்து

பெர்முடா டிரையாங்கிள் என்னும் பெரிதாக்கப்பட்ட பிம்பம்..!! எல்லா இடத்திலும் நடப்பதுதன் அங்கேயும் நடக்குது..!!

பெர்முடா டிரையாங்கிள் பத்தி நாம புதுசா சொல்வதற்கு எதுவுமே இல்லைங்க.. கடந்த எழுபது வருஷமா இத பத்தி நிறைய புத்தகங்கள் வந்துருச்சு, வீடியோக்கள் வந்துருச்சு.. ஏன் சினிமாவே எடுத்துட்டாங்க. மர்மமான விஷயங்கள விரும்பர மக்களுக்கு இந்த பெர்முடா டிரையாங்கிள் போதும் போதும் என்கிற அளவுக்கு எல்லோருக்கும் தீனி போட்டுறுச்சு..

இந்த கட்டுரையில நாம பெர்முடா டிரையாங்கிள் என்றால் என்ன, அதுல நடந்த விபத்துக்கள் என்னென்ன அப்படின்னெல்லாம் பாக்கப் போறதில்லங்க.. பொதுவா, பெர்முடா டிரையாங்கிள்ள என்ன நடந்திருக்கும், மற்ற பகுதிகள்ள நடந்த விபத்துகள விட அங்க நடந்த விபத்துகள் எண்ணிக்கையிலும், தன்மையிலும் வித்தியாசமானதா அப்படின்னு அறிவியல் பூர்வமா பாக்க போறோம்..

தொழில்நுட்பம் அவ்வளவாக வளராத அந்தக் காலத்துல  விமானங்கள்,  கப்பல்கள்  இவற்றுல  ஏற்படும்  தொழில் தொழில்நுட்ப  கோளாறு காரணமாகவும்,  மோசமான வானிலை காரணமாகவும், மனித தவறுகளாலயும்  ஏற்பட்ட விபத்துக்கள,  ரொம்பவும் பெரிதுபடுத்தி  ஏலியன்ஸ் அட்டாக் பண்றாங்க,  கடலுக்குள்ள காந்தம்  இருக்கு  அப்படினு ஏகத்துக்கு  கதை கட்டி  காசு பார்த்தாங்க… 

1074 ல சார்லஸ் பெர்லிட்ஸ் அப்படிங்கிறவரு ‘தி பெர்முடா டிரையாங்கிள்’ அப்டின்னு ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார். உலகம் முழுக்க முப்பது மொழிகளில் 2 கோடி காப்பி அந்த புத்தகம் வித்திருக்கு… இது ஒரு சின்ன சாம்பிள் தான்.. இது மாதிரி பல புத்தகங்கள், பல வீடியோ ஆவணங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சினிமாக்கள் இந்த விபத்துக்கள இன்னும் பெரிதுபடுத்தி லாபம் பார்த்தார்கள்.

முதல்ல நாம தெரிஞ்சுக்க வேண்டியது பெர்முடா டிரையாங்கிள் அப்படிங்கிறது ரொம்ப பிஸியான ஒரு ஏரியா. தமிழ்நாட்டை எடுத்துக்கங்க.. மற்ற மாவட்டங்களில் நடக்கும் விபத்துகளை விட சென்னையில் அதிக விபத்துக்கள் நடக்கும். ஏன்னா மக்கள் நெருக்கம் ஜாஸ்தி. அதேபோல பெர்முடா டிரையாங்கிளும் ரொம்ப பிஸியான ஏரியா. ஈக்வேடருக்கு அருகில் இருக்கு.. அப்புறம் உலகத்தின் மிக வளமையான ஒரு தேசத்துக்கு ரொம்ப அருகில் இருக்கு.. அது எந்த தேசம்? அமெரிக்கா!! அப்ப அதிகப்படியான கப்பல்களும், விமானங்களும் போக வர இருக்கும்தானே..!

இரண்டாவது.. பெர்முடா டிரையாங்கிளில் மறைந்து போகும் விமானங்களின், கப்பல்களின் எண்ணிக்கையானது, உலகின் மற்ற பகுதிகளில் நடக்கும் விபத்துகளின், காணாமல் போகும் விமானம் மற்றும் கப்பல்களின் எண்ணிக்கைக்கு எந்த விதத்திலும் அதிகமில்லை.

அதாவது.. சராசரியா உலகில நடக்கிற விபத்துகளின் எண்ணிக்கைகு எந்த விதத்திலும் அதிகமில்லாத எண்ணிக்கைலதான் அங்கயும் விபத்துகள் நடக்குது. ஆனா.. நம்ம மர்ம விரும்பிகள் பெர்முடா டிரையாங்கிளில் நடக்கும் விபத்துகளுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, இத ஒரு பூதாகரமான, அமானுஷ்யமான விஷயமா மாத்திகிட்டு இருக்காங்க..

பெர்முடா டிரையாங்கிள் மர்மங்கள் பற்றி பேசுறவங்க முக்கியமாக குறிப்பிடுவது பிளைட் 19 அப்படிங்கிற விமானம் மறைந்து போனதைப் பத்தி தான். இந்தப் பிளைட் 19 அப்படிங்கிற விமானம், ஏற்கனவே தொடர்புள இருந்து காணாமல் போன யுஎஸ் நேவிய சேர்ந்த 5 பயிற்சி விமானங்களை கண்டுபிடிக்க போன ஒரு விமானம் ஆகும்.

1945  டிசம்பர் 5ஆம் தேதி  இந்த ஐந்து விமானங்களும் இரண்டு மணிநேர பயிற்சிக்காக அட்லாண்டிக் கடல் பகுதியில் பறந்து போனது. 

ரேடியோ தொடர்புகள் அறுந்து போனதால, இந்த ஐந்து விமானங்களும், மற்றும் அதிலிருந்த 14 பேரும் காணாம போயிட்டாங்க.. அன்னைக்கு ராத்திரியே இந்த ஐந்து விமானங்களும் கண்டுபிடிப்பதற்காக கிளம்பின பிளைட் 19 விமானமும், அதில இருந்த 13 பேரும் காணாம போயிட்டாங்க. .

உண்மையிலேயே அன்னைக்கு வானிலை ரொம்ப மோசமா தான் இருந்ததாம். அதோடு அந்த மொத்த குரூப்ல இருந்த பைலட் எல்லாருமே பயிற்சிக்காக வந்தவங்கதான். அதில் இருந்த ஒரே ஒரு அனுபவமிக்க பைலட் சார்லஸ் டெய்லர் அப்படிங்கிறவர்தான்.. ஆனால் அவரும் முதல் நாள் கடுமையாக குடிச்சிட்டு அந்த போதை இறங்காமல் இருந்தாராம். அவர் அந்த தேடுதல் பணிக்கு போதையோடு தான் வந்திருக்கிறார், அவருடைய கடிகாரத்த கூட மறந்து தான் போயிருக்காரு, அப்புறம் இதுக்கு முன்னாடியே இரண்டு தடவை தான் ஓட்டிட்டு போன விமானத்தை வழி தெரியாம தொலச்ச வரலாறு உள்ளவராம்.

அதனால,  1945 ல  6  விமானங்கள் காணாமல் போன  அந்த சம்பவம் முழுக்க முழுக்க  தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் மனித தவறுகள் மூலமா நடந்தது என்பது உறுதியாகிறது.

இன்னும் பலபேர் மேற்கொண்ட ஆய்வுகளின்படி பெர்முடா டிரையாங்கிள் பகுதியில் நடந்த விபத்துக்களின் எண்ணிக்கை மற்ற பகுதியில் நடந்த விபத்துக்கள் விட எந்த விதத்திலும் அதிகமாக இல்லை அப்டிங்கரதும், இன்சுரன்ஸ் கிளைம் மற்றும் இன்சூரன்ஸ் பிரிமியம் போன்ற விஷயங்களும் பெர்முடா டிரையாங்கிள் கடல் பாதைக்கு மற்ற பகுதிகள விட் அதிகமில்ல அப்டிங்கரதும் தெரியவருது.

மற்ற பகுதிகளில் இல்லாத ஒரு வித்தியாசமான ஒரு விஷயம் பெர்முடா ட்ரையாங்கிள் இருக்கு அப்படின்னா இந்த மீத்தேன் கேஸ் உருவாகிறதுதான். இந்தப் பகுதிகளில் இருக்கிற கடலிலிருந்து அதிகமான மீத்தேன் வாயு அதன் அடித்தளத்தில் இருந்து உருவாகி மேல வருது. அதனால ஏற்படுற நுரை போன்ற ஒரு மேல்பரப்பில் கப்பல்கள் வரும்போது அவை முழுகற சூழ்நிலை ஏற்பட்டது.

அது மீத்தேன் வாயு  மேலெழுந்து  திரண்டு நிற்கும் போது  5 லிருந்து 15 பேர்செண்டேஜ் அளவிலான மீத்தேன் வாயுவும் காற்றும் கலந்த கலவை சூடான விமானங்கள் உடைய என்ஜின் பகுதியில் படும்போது  ஒரு வெடிப்பு நிகழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது. 
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஜியாலஜிக்கல் சர்வே சயின்டிஸ்ட் இந்த மாதிரி ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா ஒத்துக்கிறாரு. ஆனா இதுவுமே,   தொழில்நுட்ப ரீதியாக பின்தங்கி  இருந்த  பழங்கால கப்பல்கள்,  விமானங்கள் போன்றவற்றுக்கு  மட்டுமே பொருந்தும் அப்டின்னு சொல்லி இருக்கிறார். 

மேலும் பெர்முடா டிரையாங்கிள்ள கானா போனதா சொல்லப்படற பல விமானங்கள் மற்றும் கப்பல்கள் அந்த பகுதியை விட்டு ரொம்ப தூரம் தள்ளி தான் மூழ்கி இருக்கிறதை பார்க்க முடியுது. இந்த மாயக் கதை எழுத்தாளர்கள், மர்ம விரும்பிகள் இந்த கப்பல்கள் விமானத்தையும் பெர்முடா டிரையாங்கிள் கணக்கிலேயே எழுதிட்டாங்க.

மூலம்[தொகு]

  • [1] பெர்முடா டிரையாங்கிள் என்னும் பெரிதாக்கப்பட்ட பிம்பம்..!! எல்லா இடத்திலும் நடப்பதுதன் அங்கேயும் நடக்குது..!! | TamilNews 24x7.com Monday, Aug 03,2020 ,09:38:14pm
"https://ta.wikinews.org/w/index.php?title=பெர்முடா_முக்கோணம்&oldid=52733" இலிருந்து மீள்விக்கப்பட்டது