உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:மலிவு தட்டைக் கணினி 'ஆக்காசு' இந்தியாவில் விற்பனைக்கு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிசெய்தி இலிருந்து
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by செல்வா

tablet என்னும் சொல் சிறிய தட்டையான (ஓடு, களிமண்கட்டி, கல்லால் ஆன சிறுதுண்டு) பொருளைக் குறிக்கும் சொல். tab = தத்து (தத்தல்) என்பதற்கும் இதற்கும் தொடர்பில்லை. எழுதுவதற்குப் பயன்படும் தட்டையான களிமண் ஓடு போன்றவற்றும் tablet என்றுதான் பெயர். இது தவிர, மருத்து மாத்திரைக்கும் tablet என்று பெயர். ஆகவே, இங்கு tablet computer என்பது சிறு பலகைக் கணி(அல்லது கணினி). எனவே இதனைப் பலகைக்கணி அல்லது தட்டைக்கணி எனலாம். (தட்டை என்னும் ஓர் உணவு வகையின் வடிவும் சிறு தட்டையான வடிவில் சற்று கெட்டியாக இருப்பது). மடிக்கணி = laptop, தட்டைக்கணி = tablet computer. தத்தல் என்னும் சொல் பொருந்தாது என்று கருதுகின்றேன்.--செல்வா 00:32, 7 அக்டோபர் 2011 (UTC)Reply