மக்கெடோனியத் தலைநகர் ஸ்கோப்பியேவில் ஐவர் சுட்டுக் கொலை

விக்கிசெய்தி இலிருந்து
மக்கெடோனியாவில் இருந்து ஏனைய செய்திகள்
மக்கெடோனியாவின் அமைவிடம்

மக்கெடோனியாவின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

சனி, ஏப்பிரல் 14, 2012

மக்கெடோனியாவின் தலைநகர் ஸ்கோப்பியேவில் ஐந்து ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


தலைநகரின் அருகேயுள்ள ஏரிக்கரை ஒன்றில் இந்த ஐவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவர்களில் நால்வர் 20 வயதிற்கும் குறைந்தவர்கள் என்றும், ஐந்தாமவர் 40 வயதானவர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களின் உடல்களில் சூட்டுக் காயங்கள் காணப்பட்டுள்ளன.


இப்படுகொலைகள் தொடர்பாக எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. கடந்த மாதம் மக்கெடோனியாவின் சிலாவிய மொழி பேசும் பெரும்பான்மை இளைஞர்களுக்கும், அல்பேனிய சிறுபான்மை இளைஞர்களுக்கும் இடையே கலவரம் இடம்பெற்றிருந்தது. இக்கலவரத்தின் போது 7 பேர் உயிரிழந்தனர். நேற்றைய படுகொலைகள் சென்ற மாதக் கலவரத்துடன் தொடர்புடையதா எனக் காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.


இப்படுகொலைகளை உடனடியாக விசாரித்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் எனக் கோரி உள்ளூர் மக்கள் கலவரத்தில் ஈடுபட்டதை அடுத்து கலவரம் அடக்கும் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.


மூலம்[தொகு]