மதுரை வழியாக செங்கோட்டை - கோவை சிறப்பு தொடருந்து சேவை

விக்கிசெய்தி இலிருந்து

சனி, அக்டோபர் 24, 2009, மதுரை:


மதுரை வழியாக செங்கோட்டையிலிருந்து கோவைக்கு வாராந்திர சிறப்பு தொடருந்து இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,


தென் மாவட்ட மக்களின் வசதிக்காக செங்கோட்டையிலிருந்து கோவைக்கு வாராந்திர தொடருந்து இயக்கப்படுக்கிறது.


இந்த தொடருந்து (0666) வருகிற 28.10.09 முதல் நவம்பர் 25 ம் தேதி வரை ஒவ்வொரு வாரம் புதன் கிழமையும் செங்கோட்டையிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு மதுரை வந்தடைகிறது. மறுநாள் காலை 7.50 மணிக்கு கோவை சென்றடைகிறது.


அதேபோல் மறுமார்க்கமாக கோவையி்லிருந்து (0665) வருகிற 27.10.09 முதல் நவம்பர் மாதம் 24 ம் தேதி வரை ஒவ்வொரு வாரம் செவ்வாய்கிழமை இரவு 7.40 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1.40 மணிக்கு வந்தடைகிறது. மறுநாள் காலை 5.45 மணிக்கு செங்கோட்டை சென்றடைகிறது.


இந்த தொடருந்துகளுக்கான முன்பதிவு நேற்று (23.10.09) முதல் தொடங்கப்பட்டுள்ளது.

மூலம்