உள்ளடக்கத்துக்குச் செல்

மாலைதீவில் கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, அக்டோபர் 18, 2009, மாலைதீவு:


மாலைதீவு அரசாங்கம் கடலுக்கு அடியில் அமைச்சரவைக் கூட்டமொன்றை வெள்ளிக்கிழமை நடத்தியுள்ளது. உலகம் வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றங்கள் ஆகியவற்றை ஆராயும் நோக்கில் இந்த விசித்திர அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.


அது பலருக்கு வினோதமாக பட்டாலும் மாலைதீவாரை பொறுத்தவரையில் அது ஒரு வாழ்வாதார மனிதாபிமான பிரச்சினை.


மாலைதீவின் சிறிய நாடாளுமன்றின் பிரதிநிதிகள் ஒன்று கூடி ஒரு சூழல் சம்பந்தப்பட்ட வேண்டுகை ஓப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளனர். ஆனால் அவர்கள் அதற்கு தெரிவு செய்துள்ள இடம்தான் பலரை மலைக்க வைத்துள்ளனது.


மாலைதீவுகளில் உள்ள கடற்படை படைத்துறைப்பள்ளிகளில் ஒன்றான கிறிபியூசி என்னும் களப்பில் நீருக்கு அடியில் 20 அடி அதாவது 6 மீட்டர் ஆழத்தில் இக்கூட்டம் நடைபெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இக்கூட்டம் நடைபெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது தீவிரவாதிகளுக்கோ அல்ல பிற ஊடுருவல்காரருக்கோ பயந்து அல்ல மீன்களுக்கு பயந்து.


மாலைதீவின் சனாதிபதி மற்றும் அமைச்சர்கள் 13 பேர் இணைந்து தமது நாட்டை பாதுகாக்குபடியும் அதற்கு புவி வெப்பமாவதற்குக் காரணமான பைங்குடில் வாயுக்களை வெளியிடுவதை குறைக்க நாடுகள் முன்வரவேண்டும் எனக் கோரும் ஒப்பந்தத்தில் இவ்வாறு நீருக்கடியில் அவர்கள் கூடி கையொப்பம் இட்டுள்ளனர். மாலைதீவுகளின் அதிபர், துணை அதிபர் மற்றும் பெண் ஒருவரை உள்ளடக்கிய அமைச்சரவைகுழு இந்த கூட்டத்தில் பங்கெடுத்துள்ளது.


1192 சிறிய தீவுகளை கொண்ட 350,000 மக்கள் தொகை கொண்ட இந்து சமுத்திரத்தின் அழகிய தீவு நாடு மாலைதீவின் அனேகமான பாகங்கள் கடல் மட்டத்திலிருந்து ஒரு மீற்றருக்கும் குறைவான உயரத்திலேயே அமைந்துள்ளதால், கடல் மட்ட அதிகரிப்பு காரணமாக 2100ம் ஆண்டளவில் தீவுக்கூட்டங்கள் வசிப்பதற்கு உகந்ததல்லாதவையாக மாறக்கூடிய அச்சுறுத்தல் உள்ளதாக அறிவியலாளர்க்க்ள் எச்சரித்துள்ளனர்.


இதனை அடிப்படையாக கொண்டு மாலைதீவின் வரலாற்றில் முதன் முறையாக நிறுவப்பட்டுள்ள ஜனநாயக அரசு பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.


வரும் டிசம்பரில் டென்மார்க் தலைநகர் கோப்பன்காகனில் நடைபெறவுள்ள காலநிலை மாநாட்டில் முன்வைக்கவென்று இவ்கோரிக்கையை அவர்கள் தயார் செய்துள்ளர்.


இது மட்டுமல்லாமல் மாலை தீவகள் தமது நாடு மூழ்கும் பட்சத்தில் நாடற்றவர்களாகும் 350,000 மக்களை பாதுகாக்க பிற நாடுகளிடம் இருந்து நிலப்பரப்பு ஒன்றை குத்தகைக்குக் கோரவுள்ளதாகவும் தெரிவித்து வருகின்றது.

மூலம்

[தொகு]