மூணாறு நிலச்சரிவு 2020

விக்கிசெய்தி இலிருந்து

மூணாறு நிலச்சரிவு பலி 27 ஆக உயர்வு.. ஒரே குழியில் புதைக்கப்படும் சடலங்கள்... கொரோனா வழிகாட்டுதலாம்.. மூணாறு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவின் இடுக்கி மாவட்ட தமிழக எல்லைப்பகுதியில் மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் 78 தமிழர்கள் வேலை செய்து வந்தனர். இவர்கள் அங்கேயே உள்ள 20 வீடுகளில் இவர்கள் தங்கியிருந்தனர்.

கடந்த 7ம் தேதி அதிகாலையில் பெட்டிமுடி பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், அந்த20 வீடுகளும் மண்ணுக்குள் புதைந்தன.

தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 16 பேர் படுகாயங்களுடனும், 17 பேர் சடலமாகவும் மீட்கப்பட்டனர். இதற்கிடையே தொடர்மழை மற்றும் இருள் சூழ்ந்ததால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது. 2-வது நாளாக நேற்று காலையில் மீட்பு பணி தொடங்கியது. மேலும் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

மழை பெய்து கொண்டே இருந்ததால் அவ்வப்போது மீட்பு பணி நிறுத்தப்பட்டது. இருள்சூழ்ந்து காணப்பட்டதால் மாலை 6 மணியோடு மீட்பு பணி நிறுத்தப்பட்டது.

அனைத்து உடல்களும் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் அவர்களின் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்படவில்லை. தேயிலை தோட்ட நிர்வாகம் அனுமதி அளித்த இடத்தில் ராட்சத குழி தோண்டப்பட்டது. அந்த குழிக்குள் அனைத்து உடல்களும் அடக்கம் செய்யப்பட்டது.

மூலம்[தொகு]

  • [1] மூணாறு நிலச்சரிவு பலி 27 ஆக உயர்வு.. ஒரே குழியில் புதைக்கப்படும் சடலங்கள்... கொரோனா வழிகாட்டுதலாம்.. | TamilNews 24x7.com Sunday, Aug 09,2020 ,09:04:40am
"https://ta.wikinews.org/w/index.php?title=மூணாறு_நிலச்சரிவு_2020&oldid=52738" இலிருந்து மீள்விக்கப்பட்டது