உள்ளடக்கத்துக்குச் செல்

ரஷ்யாவின் நீர் மின் உற்பத்தி நிலைய வெடிவிபத்தில் 76 பேர் இறப்பு

விக்கிசெய்தி இலிருந்து
அக்காசியா குடியரசு

செவ்வாய், ஆகத்து 18, 2009, ரஷ்யா:


ரஷ்யாவின் மிகப்பெரிய நீர் மின் உற்பத்தி நிலையத்தில் திங்களன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 76 பேர் வரை கொல்லப்பட்டதாக நம்புவதாக ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர்.


ரஷ்யக் குடியரசான அக்காசியாவில் சயானோ-சூசென்ஸ்கயா நீர்மின் உற்பத்தி நிலையத்தில் இடம்பெற்ற இவ்வெடிவிபத்தில் 12 பேர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னமும் கண்டுபிடிக்கப்படாத 64 பேர் உயிருடன் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பும் இல்லாது போய்விட்டது.


இந்த விபத்து காரணமாக பல நகரங்களும் ஆலைகளும் மின்சாரத்தை இழந்துள்ளன.


இராட்சச மின் உற்பத்தி விசிறிகளுக்கான மண்டபம் முற்றாக நிர்மூலமான இந்த விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. உடைந்துபோன ஒரு விசிறியால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மூலம்[தொகு]