ருவாண்டா படுகொலைகளுக்காகத் தேடப்பட்டு வந்த முக்கிய நபர் கைது
செவ்வாய், அக்டோபர் 6, 2009, உகாண்டா:
ருவாண்டாவில் 1994 ஆம் ஆண்டு நடந்த இனப்படுகொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் உகாண்டாவில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இடெல்போன்செ நிசெயிமன என்கிற இந்த மனிதர் தான்சானியாவில் நடக்கும் ருவாண்டா இனப்படுகொலை தொடர்பான தீர்ப்பாயத்திற்கு கொண்டு செல்லும் வகையில் உடனடியாக நாடுகடத்தப்பட்டார். இந்த தீர்ப்பாயத்தில் முக்கிய குற்றவாளியாக வர்ணிக்கப்படுகிறார்.
ருவாண்டாவின் 80 வயது துட்சி இன அரசியையும், துட்சி இனப் பேராசிரியர்களையும், கொல்வதற்கான ஆணைகளை 1994 ஆம் ஆண்டில் உளவுத்துறைத் தலைவராக இருக்கும் போது இவர் பிறப்பித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. துட்சி இன மக்கள் தப்பிச்செல்ல முடியாமல் சாலைகளில் தடுப்புக்களை ஏற்படுத்தி அவர்களை பிடித்துக் கொல்வதற்கும் இவர் ஆணையிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவரது கைதை வரவேற்றிருக்கும் ருவாண்டா அரசின் சார்பில் பேசவல்ல அதிகாரி, இந்த நபர் ருவாண்டாவில் வழக்குகளை சந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
- 1994 ருவாண்டா படுகொலைகள்
- ஏப்ரல் 6, 1994: அதிபர் ஜுவெனல் ஹபியாரிமானா விமானக் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார்.
- ஏப்ரல்-ஜூலை: கிட்டத்தட்ட 800,000 துட்சி இனத்தவர்கள், மற்றும் ஹூட்டு மிதவாதிகள் கொல்லப்பட்டனர்.
- ஜூலை: துட்சி-தலைமையிலான போராளிகள் தலைநகர் கிகாலியைக் கைப்பற்றினர்.
- ஜூலை: 2 மில்லியன் ஹூட்டு இனத்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.
மூலம்
[தொகு]- "Rwanda queen-killing suspect held". பிபிசி, அக்டோபர் 6, 2009